உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 2/15 பக். 32
  • உலகிற்கு யார் உணவளிப்பார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகிற்கு யார் உணவளிப்பார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 2/15 பக். 32

உலகிற்கு யார் உணவளிப்பார்?

பட்டினியின் வாசலில் நிற்போரின் எண்ணிக்கை 80 கோடி; அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என ஐக்கிய நாட்டு சங்கத்தின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பு கணக்கிடுகிறது. இப்பிரச்சினையை சரிசெய்வதற்குத் தேவையான நிதியையும் கவனிப்பையும் தீவிரவாதம் போன்ற மற்ற பிரச்சினைகளுக்கே வளர்ச்சியடைந்த நாடுகள் அளித்திருக்கின்றன என்பதாக சமீபத்தில் அந்த அமைப்பு சொன்னது. ஜெட் வேகத்தில் பரவும் தொற்று நோய்கள் இப்பிரச்சினையைப் பூதாகரமாக்கி இருக்கின்றன. அந்த அமைப்பின் உலகளாவிய பள்ளி உணவுத் திட்ட அறிக்கை, எய்ட்ஸ் நோய் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “பெற்றோரின் ஒரு தலைமுறையையே எய்ட்ஸ் ஒட்டுமொத்தமாகக் காவு கொண்டிருக்கிறது. அவர்கள் விட்டுச்சென்ற பிள்ளைகள், பொதுவாக வழிவழியாய் கற்றுக் கொடுக்கப்படும் விவசாயம், வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திறமைகள் போன்ற எதையுமே கற்றுக்கொள்ள வழியின்றி, தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.”

பள்ளிகளில் ஒரு நாளைக்கு ஒரே ஒரு வேளையாவது உணவளிக்கும் முயற்சியை உலக உணவுத் திட்டம் ஊக்குவிக்கிறது. பசியை ஆற்றுவதற்காக மட்டுமல்லாமல், இளைஞர்களிடையே எச்ஐவி/எய்ட்ஸ் பரவாமல் தடுப்பதற்குரிய மற்ற திட்டங்களை தொடர்ச்சியான கல்வி மூலம் செயல்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள இடங்களில், பிள்ளைகளுக்கு சத்துள்ள உணவும், தனிப்பட்ட சுகாதாரப் பயிற்சியும், இன்னும் பிற உதவிகளும் கிடைத்துள்ளன. மக்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்படும்போது, எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றும் விகிதம் குறைவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது.

மனிதர் எடுக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் முழுமையான, நிரந்தரமான தீர்வை அளிப்பதில்லை என்பது வருத்தமான விஷயம். ஆனால், பசி சுவடு தெரியாமல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற ஆறுதலளிக்கும் வாக்குறுதியை பைபிள் அளிக்கிறது. “பூமியில் ஏராளமான தானியம் இருக்கும்” என்பதாக சங்கீதம் 72:16 (NW) கூறுகிறது. யெகோவா தேவனுடைய அரசாங்கத்தில், அவரைப் பற்றி ஜனங்களால் இவ்வாறு சொல்ல முடியும்: “தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப் பாய்ச்சுகிறீர்; . . . இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.”​—⁠சங்கீதம் 65:⁠9.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

WFP/Y. Yuge

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்