உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 8/15 பக். 32
  • “அதை செய்யுங்க அதுதான் பெஸ்ட்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அதை செய்யுங்க அதுதான் பெஸ்ட்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 8/15 பக். 32

“அதை செய்யுங்க அதுதான் பெஸ்ட்”

அலெக்ஸிஸ் என்ற ஐந்து வயது குட்டிப்பையனும் அவனுடைய பெற்றோரும் மெக்சிகோவிலுள்ள மோரேலியா பட்டணத்தில் வசிக்கிறார்கள். அலெக்ஸிஸின் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்கிறார்கள், கூட்டங்களுக்கும் செல்கிறார்கள். ஒருமுறை குடும்பமாக அவர்கள் வட்டார மாநாட்டிற்கு சென்றிருந்தார்கள். வீட்டிற்கு வீடு ஊழியம் செய்வது பற்றிய ஒரு நடிப்பு அந்த மாநாட்டில் இருந்தது. அதைப் பார்த்ததுமே தன் அப்பாவிடம் திரும்பி, “டாடி, டாடி நீங்களும் அதே மாதிரி வீடு வீடா போய் பேசலாம் இல்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர் “அதுக்காகத்தான் இப்போ நான் படிச்சிட்டிருக்கிறேன்” என்றார். அதற்கு அலெக்ஸிஸ், “ஆமா டாடி, அதை செய்யுங்க அதுதான் பெஸ்ட்” என்று உற்சாகக் குரலில் சொன்னான்.

யெகோவாவை பற்றி தான் அறிந்துகொண்டதற்கு இசைவாக நடக்க வேண்டிய அவசியத்தை இந்தச் சிறுவன் உணர்ந்து கொண்டான். அலெக்ஸிஸின் வீட்டில் அவனுடைய சித்தியின் பிள்ளைகளும் இருந்தார்கள். எனவே அவர்களிடம் பைபிளைப் பற்றி பேச முடிவு செய்தான். முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு பிறகு என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து தன்னுடைய அப்பா அம்மா சொல்லித் தந்திருந்த விஷயங்களையெல்லாம் அவர்களுக்கு சொன்னான். படிக்கத் தெரியாத அந்தப் பிஞ்சு வயதிலும் அந்தப் புத்தகத்திலுள்ளதை அத்துப்படியாக தெரிந்து வைத்திருந்தான், ஆம், படங்களை பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கதைகளை அலெக்ஸிஸ் சொல்லிவிடுவான். அதுமட்டுமல்ல, கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி கற்றுக்கொள்ளும் விஷயங்களை வீடு வீடாக சென்று ஜனங்களிடம் சொல்ல தான் ஆசைப்படுவதாகவும் சொன்னான்.

உண்மைதான், சிறியவர்களும் சரி பெரியவர்களும் சரி, ‘பரிசுத்தராகிய’ யெகோவாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்; ஜனங்கள் மத்தியில் அவரைப் பற்றி சாட்சிகொடுக்கும் மிகப் பெரிய பாக்கியத்தையும் பெற்றிருக்க முடியும். (ஏசாயா 43:3; மத்தேயு 21:16) நாம் செய்கிற பெஸ்ட் வேலைகளில் இதுவும் ஒன்று என்பதில் துளியும் சந்தேகமில்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்