உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 8/1 பக். 32
  • “‘செய்தோம்!’ என சொல்வோம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “‘செய்தோம்!’ என சொல்வோம்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 8/1 பக். 32

“‘செய்தோம்!’ என சொல்வோம்”

நைஜீரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது; அதன் ஒரு பகுதி பின்வருமாறு:

“எங்கள் 14 வயது மகன் ஆண்டர்சன் இறந்துவிட்டான். இறப்பதற்கு முன்பு அவன் இரண்டு கோழிக் குஞ்சுகளை வளர்த்து வந்தான். அவற்றை விற்று அந்தப் பணத்தை உலகளாவிய பிரசங்க வேலைக்கு நன்கொடையாக கிளை அலுவலகத்துக்கு அனுப்ப ஆசைப்பட்டான். ஆனால் அவற்றை விற்பதற்கு முன்பாகவே அவன் இறந்துவிட்டான்.

“பெற்றோர்களாகிய எங்களுக்கு அவனது ஆசை தெரியும்; எனவே அந்த கோழிக் குஞ்சுகளை வளர்த்து அவற்றை விற்றோம். அந்தப் பணத்தை ஆண்டர்சனின் நன்கொடையாக உங்களுக்கு அனுப்புகிறோம். யெகோவா வாக்குறுதி அளித்திருப்பதால் சீக்கிரத்தில், வெகு சீக்கிரத்தில் ஆண்டர்சனை மீண்டும் காண்போம் என உறுதியோடிருக்கிறோம். அவனது ஆசைப்படி நாங்கள் செய்தோமாவென அவன் எங்களிடம் கேட்டால் ‘செய்தோம்!’ என சொல்வோம். ஆண்டர்சனை மட்டுமல்ல உயிர்த்தெழுப்பப்படப் போகும் ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளையும்’ காண நாங்கள் உண்மையில் ஆவலோடு இருக்கிறோம்.”​—⁠எபிரெயர் 12:1; யோவான் 5:28, 29.

உயிர்த்தெழுதல் நம்பிக்கை மெய்க் கிறிஸ்தவர்களை பலப்படுத்தும் ஒன்று என்பது இந்தக் கடிதத்திலிருந்து தெளிவாகிறது. ஆண்டர்சனின் குடும்பத்தாரைப் போலவே லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை மரணம் எனும் சத்துருவிடம் பறிகொடுத்திருக்கிறார்கள்; உயிர்த்தெழுந்து வரும் அவர்களை வரவேற்கையில் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்!​—⁠1 கொரிந்தியர் 15:24-26.

ஆறுதலளிக்கும் இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கையை கடவுளுடைய வார்த்தை அளிக்கிறது, கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் நீதியுள்ள புதிய உலகில் சீக்கிரத்தில் நிகழவிருக்கும் அநேக அற்புதமான காரியங்களில் இதுவும் ஒன்று. (2 பேதுரு 3:13) அந்த சமயத்தில் கடவுள் மனிதர்களுக்கு என்ன செய்வார் என்பதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—⁠வெளிப்படுத்துதல் 21:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்