உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 7/1 பக். 32
  • அவற்றிற்கு என்ன ஆனது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவற்றிற்கு என்ன ஆனது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 7/1 பக். 32

அவற்றிற்கு என்ன ஆனது?

மோப், தீப்ஸ் ஆகிய இரு நகரங்களும் ஒரு காலத்தில் எகிப்தின் தலைநகரங்களாக பிரசித்திபெற்று விளங்கின; இவற்றின் பைபிள் பெயர்களே நோப் மற்றும் நோ. இந்த நோப் (மோப்) நகரம் கெய்ரோவிற்குத் தெற்கே சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் நைல் நதியின் மேற்கு பக்கத்தில் அமைந்திருந்தது. ஆனால் காலப்போக்கில், எகிப்தின் தலைநகரம் என்ற அந்தஸ்தை மோப் இழந்தது. பொ.ச.மு. 15-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், நோ (தீப்ஸ்) நகரம் எகிப்தின் புதிய தலைநகரமானது. இது மோப் நகரத்திற்கு தெற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தீப்ஸ் நகரத்தில் சிதிலங்களாக மாறிய அநேக கோயில்களில் ஒன்றுதான் கேர்னாக்; தூண்கள் வைத்து கட்டப்பட்ட கட்டடங்களிலேயே மிகவும் பிரமாண்டமான கட்டடமாக இது கருதப்பட்டது. தீப்ஸ் நகரமும் அதன் கேர்னாக் கோயிலும் எகிப்தியரின் முக்கிய தெய்வமாகிய ஆமோன் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

மோப் மற்றும் தீப்ஸ் சம்பந்தமாக பைபிள் என்ன முன்னறிவித்தது? எகிப்திய பார்வோனுக்கும் அவனுடைய தெய்வங்களுக்கும், முக்கியமாக பிரதான தெய்வமாகிய ‘நோ பட்டணத்து ஆமோன்’ தெய்வத்திற்கும் எதிராக நியாயத்தீர்ப்பு வரவிருந்ததை முன்னறிவித்தது. (எரேமியா 46:25, 26, திருத்திய மொழிபெயர்ப்பு) அங்கு பெருங்கூட்டமாக திரண்டு செல்லும் வழிபாட்டாளர்கள் ‘சங்கரிக்கப்படுவார்கள்’ என்றும் முன்னறிவித்தது. (எசேக்கியேல் 30:14, 15) அது அப்படியே சம்பவித்தது. ஆமோன் வழிபாடு சம்பந்தமாக மீந்திருப்பதெல்லாம் அந்த ஆலயத்தின் இடிபாடுகளே. நவீன நகரமாகிய லக்ஸர் பூர்வ தீப்ஸ் வீற்றிருந்த இடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மற்ற சிறுசிறு கிராமங்களோ அந்த இடிபாடுகளின் மத்தியில் கிடக்கின்றன.

மோப் நகரத்தைப் பற்றியென்ன? அங்கு கல்லறைகளைத் தவிர வேறொன்றுமில்லை. பைபிள் அறிஞர் லூயி கோல்டிங் இவ்வாறு கூறுகிறார்: “நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, எகிப்தை கைப்பற்றிய அரேபியர்கள், நதியின் எதிர்ப்புறத்தில் அமைந்திருந்த தங்களுடைய தலைநகரத்தின் [கெய்ரோ] கட்டடங்களுக்கு மோப் நகரத்தின் இமாலய இடிபாடுகளைப் பயன்படுத்தினர். அரேபிய கட்டடக் கலைஞர்கள் கொஞ்சம்கூட மிச்சம் மீதி வைக்காமல் அந்தளவுக்கு நைல் நதி வண்டல்களை வாரியெடுத்துவிட்டதால், பல மைல் சுற்றளவுக்கு அந்தப் பூர்வீக நகரத்தின் கரிசல் மண்ணிற்கு மேல் ஒரு கல்கூட நீட்டிக்கொண்டு இருக்கவில்லை.” உண்மையில், பைபிள் முன்னறிவித்தபடியே, மோப் ‘குடியில்லாமல் பாழாய் போனது.’​—⁠எரேமியா 46:⁠19.

பைபிள் தீர்க்கதரிசனங்களின் துல்லியத்திற்கு சான்றளிக்கும் எண்ணற்ற உதாரணங்களில் இவை இரண்டே இரண்டுதான். தீப்ஸ் மற்றும் மோப் பாழாய் போனது, இன்னும் நிறைவேறவிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களில் நம்பிக்கை வைப்பதற்கு பலமான காரணத்தைத் தருகிறது.​—⁠சங்கீதம் 37:10, 11, 29; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3-5.

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

Photograph taken by courtesy of the British Museum

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்