உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 11/1 பக். 25-26
  • “மத சகிப்பு நாள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மத சகிப்பு நாள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்களா?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • யெகோவாவின் சாட்சிகள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • கிறிஸ்தவர்களும் இன்றைய மனித சமுதாயமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பூமி முழுவதிலும் சுறுசுறுப்பாய் செயல்படும் ராஜ்ய அறிவிப்பாளர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 11/1 பக். 25-26

“மத சகிப்பு நாள்”

யெகோவாவின் சாட்சிகளுடன் உரையாடியது அந்தளவுக்கு ஆர்வத்தை தூண்டியதால், போலந்திலுள்ள ஒரு பள்ளி தலைமை ஆசிரியை தன்னுடைய பள்ளிக்கென ‘மத சகிப்பு நாளை’ ஏற்பாடு செய்தார். கத்தோலிக்கர், புத்த மதத்தினர் மற்றும் யெகோவாவின் சாட்சிகளில் விருப்பமுள்ள மாணவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளையும் வணக்கமுறைகளையும் மற்ற மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் சுருக்கமான பேச்சுகளை தயாரிக்கும்படி அவர் ஆலோசனை கூறினார். அவர் சொன்ன மாத்திரத்தில் யெகோவாவின் சாட்சிகளில் டீனேஜ் மாணவர்கள் மூன்று பேர் முன்வந்தார்கள்.

அந்த நாள் வந்ததும் முதலில் பேசியவர் 15 வயது மால்வினா. தன்னுடைய பேச்சின் ஒரு பகுதியில் அவள் இவ்வாறு கூறினாள்: “நாங்கள் இந்தப் பள்ளியில் சேருவதற்கு முன்பே உங்களில் அநேகர் எங்களை அறிந்திருப்பீர்கள்; ஏனெனில் உங்களுடைய வீடுகளுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் ஏன் இதை தொடர்ந்து செய்து வருகிறோம் என நீங்கள் நினைக்கலாம். கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றுவதாலேயே இவ்வாறு செய்கிறோம். அவர் ஜனங்களை எங்கு பார்த்தாலும் அவர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பற்றி பிரசங்கித்தார். அப்போஸ்தலர்களும் மற்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களும் இதையே செய்தார்கள். பல இடங்களில், யெகோவாவின் சாட்சிகள் கடினமான விசுவாச பரீட்சைகளை சகிக்கிறார்கள்; ஆனால் இந்தப் பள்ளியில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சமாதானமாக இருப்பதற்காக சந்தோஷப்படுகிறோம்; இதற்கு நீங்கள் அனைவருமே முக்கிய காரணம். அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்!”

தன்னுடைய பேச்சின் முடிவில் மால்வினா இவ்வாறு கூறினாள்: “நாங்கள் உங்களை வீடுகளில் சந்திப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. உங்கள்மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. ஏனெனில் இந்த உலகையே அதிர வைக்கும் சம்பவங்களை மனிதகுலம் வெகுவிரைவில் எதிர்ப்படும் என பைபிள் கூறுகிறது. ஆகவே, அடுத்த முறை நாங்கள் உங்கள் கதவை தட்டுகையில் தயவுசெய்து காதுகொடுத்து கேளுங்கள். பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் என்றென்றுமாக நாம் ஒன்றுசேர்ந்து வாழ்வது எப்படி என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம்.”

அடுத்த பேச்சாளர், மாடேயூஷ்; இந்த மாணவனுக்கும் 15 வயதுதான். பல வருடங்களாகவே, யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என மாடேயூஷ் கூடிவந்திருப்போரிடம் சொன்னான். உதாரணமாக, 1914-⁠ல்​—⁠ஊமைப் படங்கள் இருந்த காலத்தில்​—⁠யெகோவாவின் சாட்சிகள் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற ஒலியோடுகூடிய இயங்கு திரைப்படத்தையும் ஸ்லைடு காட்சியையும் காண்பித்தார்கள்.

ராஜ்ய செய்தியை பரப்புவதில் வானொலி வகித்த பாகத்தைப் பற்றி மாடேயுஷ் எடுத்துரைத்தான். அதற்குப்பின் யெகோவாவின் சாட்சிகள் உருவாக்கிய மெப்ஸ் என்ற ஒப்பற்ற கம்ப்யூட்டர் புரோகிராமை (multilanguage electronic phototypesetting system [MEPS]) பற்றியும் விவரித்தான். இரத்தமில்லா சிகிச்சையைப் பற்றிய நுட்பங்களை மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு உதவியிருக்கிறார்கள் என்பதையும் அவன் விளக்கினான். “இப்போது, பிரபல போலிஷ் மருத்துவர்கள் எங்களுடைய நிலைநிற்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்; ஒவ்வொரு வருடமும் சாட்சிகளல்லாத அநேகமநேக நோயாளிகளுக்கும் இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது எனவும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்” என அவன் கூறினான்.

மாடேயூஷ் தன்னுடைய பேச்சின் முடிவில், ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதைப் பற்றி சொல்லி, இவ்வாறு குறிப்பிட்டான்: “எங்களுடைய ராஜ்ய மன்றத்திற்கு வந்து பார்க்கிறீர்களா? அனுமதி இலவசம், எவ்வித காணிக்கையும் வசூலிப்பதில்லை.” சாஸ்நோவியட்ஸிலுள்ள மாநாட்டு மையத்தைப் பற்றி பேசுகையில் மாடேயூஷ் இவ்வாறு கூறினான்: “பிரமாண்டமாகவும் நடைமுறைக்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடத்தை நீங்கள் கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டும். நாம் எல்லாருமாக அங்கு சென்றால் என்ன? அதற்கு ஓர் ஐடியா இருக்கிறது; நம் தோழி காட்டார்ஷினா அதைப் பற்றி உங்களுக்கு சொல்வாள்.”

அடுத்ததாக, 15 வயது காட்டார்ஷினா உற்சாகம் பொங்க இவ்வாறு கூறினாள்: “சாஸ்நோவியட்ஸில் நடக்கப்போகும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டிற்கு உங்களை வருக வருக என அழைக்கிறோம். இளைஞரைப் பற்றிய விஷயங்கள் அங்கு பேசப்படும்.” கிறிஸ்தவர்களின் மிக முக்கிய ஆசரிப்பாகிய இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாளைப் பற்றியும் காட்டார்ஷினா குறிப்பிட்டாள். கேட்போரை ஊக்குவிக்கும் வண்ணம் அவள் இவ்வாறு கூறினாள்: “இந்த ஆசரிப்பில் கடந்த வருடம் உலகெங்கும் 1.4 கோடி ஜனங்கள் கலந்துகொண்டார்கள். அடுத்த முறை நீங்களும் எங்களுடன் கலந்துகொண்டால் என்ன?”

பேச்சுகளைக் கொடுத்த பின்பு, மால்வினா, மாடேயூஷ் மற்றும் காட்டார்ஷினா, யெகோவாவின் சாட்சிகள்​—⁠கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தையும் அதோடு யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் விளக்கும் இரண்டு வீடியோ கேஸட்டுகளையும் ஆசிரியர்களுக்கு கொடுத்தார்கள்.a ஆசிரியர்கள் சந்தோஷத்துடன் அவற்றை வாங்கி சரித்திர பாடங்கள் நடத்துகையில் அவற்றை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.

அந்நிகழ்ச்சியின் முடிவில் 12 வயது மார்டினா “யெகோவாவே, உமக்கு நன்றி” என்ற தலைப்பிலான பாடலை கூடிவந்திருக்கும் அனைவருக்கும் முன்பாக இசைத்தாள். இந்த இளம் சாட்சிகள் ‘தங்கள் தேவனுடைய உதவியால் தைரியத்தை ஒன்று திரட்டி’ சிறந்த விதத்தில் சாட்சி கொடுத்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:2, NW) எங்குமுள்ள இளம் சாட்சிகளுக்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 26-ன் படம்]

காட்டார்ஷினா பேச்சுக்கான வசனங்களை தேர்ந்தெடுக்கிறாள்

[பக்கம் 26-ன் படம்]

பள்ளியில் பேச்சைக் கொடுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மால்வினா அதற்குத் தயாரிக்கிறாள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்