உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 6/15 பக். 32
  • “நண்பர் கொடுக்கும் அடிகள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நண்பர் கொடுக்கும் அடிகள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 6/15 பக். 32

“நண்பர் கொடுக்கும் அடிகள்”

முதல் நூற்றாண்டு கலாத்திய கிறிஸ்தவர்கள் தங்களை திருத்திக்கொள்ள சில அறிவுரைகள் வழங்குவதை அப்போஸ்தலன் பவுல் அவசியமாக கண்டார். அவர்கள் ஒருவேளை மனக்கசப்படைவதை தவிர்க்க, “நான் உங்களுக்கு உள்ளதைச் சொன்னதினாலே உங்கள் சத்துருவாய்விட்டேனோ?” என்று கேட்டார்.​—⁠கலாத்தியர் 4:16, தி.மொ.

“உள்ளதைச் சொன்னதினாலே” பவுல் அவர்களுக்கு சத்துருவாகவில்லை. சொல்லப்போனால், “நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை” என்ற பைபிள் நியமத்திற்கு இசைவாகவே நடந்துகொண்டார். (நீதிமொழிகள் 27:6, பொ.மொ.) தவறு செய்தவர்களுடைய சுயகௌரவம் பாதிக்கப்படும் என்பதை பவுல் அறிந்திருந்தார். இருந்தாலும், ஒரு பாவிக்கு சிட்சை கொடுக்கவில்லையெனில், யெகோவாவின் அன்பை அந்த நபருக்குக் காட்டவில்லை என்று அர்த்தமாகிவிடும். (எபிரெயர் 12:5-7) ஆகவே, சபையின் நீடித்த நலனில் உள்ளப்பூர்வ அக்கறை கொண்ட ஓர் உண்மையான நண்பன் என்ற நிலையில், கண்டித்து அறிவுரை வழங்குவதிலிருந்து பவுல் பின்வாங்கவில்லை.

‘சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . [இயேசு கிறிஸ்து] கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்’ என்ற கட்டளையை இன்று யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றுகிறார்கள். இப்படி செய்கையில், பைபிள் வெளிப்படையாக கண்டனம் செய்யும் தவறான கோட்பாடுகளையும் கெட்ட நடத்தையையும் உண்மை கிறிஸ்தவர்களாகிய இவர்கள் மூடிமறைப்பதோ விட்டுக்கொடுத்து விடுவதோ கிடையாது. (மத்தேயு 15:9; 23:9; 28:19, 20; 1 கொரிந்தியர் 6:9, 10) ஆகவே அவர்கள் ஒதுக்கப்படும் பகைவர்கள் அல்ல, மாறாக பிறரில் அக்கறை காட்டும் உண்மையான நண்பர்கள்.

தெய்வீக ஏவுதலால் சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை.”​—⁠சங்கீதம் 141:5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்