நீங்கள் தவறவிடக் கூடாத ஒரு நிகழ்ச்சி
“நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம்” நம் பரலோக தகப்பனாகிய கடவுளிடமிருந்து வருகின்றன.—யாக்கோபு 1:17, பொ.மொ.
பாவச் சேற்றில் வீழ்ந்துபோன மனிதவர்க்கத்தை மீட்பதற்கு கடவுள் தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். இதுவே அவர் நமக்கு அளித்திருக்கும் மிகப் பெரிய பரிசு. பூத்துக்குலுங்கும் பரதீஸிய பூமியில் நித்திய காலமாக வாழும் பாக்கியத்தை நமது மீட்பராகிய இயேசுவின் மரணம் அருளுகிறது. அவருடைய மரணத்தை நினைவுகூரும்படி லூக்கா 22:19 நமக்கு கட்டளையிடுகிறது.
இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் தங்களோடு சேர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களை அன்புடன் அழைக்கிறார்கள். பைபிளின் சந்திர நாட்காட்டியில் நிசான் 14-க்கு இணையான தேதியாகிய ஏப்ரல் 8, 2001 ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப்பின் இந்த வருடாந்தர நிகழ்ச்சி நடைபெறும். நீங்கள் மறந்துவிடாமலிருக்க இந்தத் தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஊரில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள், கூட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் தெரிவிப்பார்கள்.