உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 11/1 பக். 32
  • உலக சமாதானம் எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக சமாதானம் எப்படி?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 11/1 பக். 32

உலக சமாதானம் எப்படி?

உலக சமாதானம் கண்ணில் தென்படுகிறதா? அப்படித்தான் அநேகர் ஒருகாலத்தில் நம்பினார்கள், ஆனால் இப்பொழுதோ அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது. எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் சவால்களைப் பற்றி பேசுகையில், தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் டெய்லி மெய்ல் அண்ட் கார்டியன் இவ்வாறு அறிக்கை செய்தது: “வெறும் பத்தாண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்ட சர்வதேச சமாதானத்திற்கான ஆருடங்கள் இப்பொழுது நம்பமுடியா நம்பிக்கைகளாக தெரிகின்றன.”

பத்தாண்டுகளுக்கு முன்பு நிலவிய நம்பிக்கையான மனநிலையை இந்த ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்பொழுதுதான் பனிப்போர் ஒருவழியாக ஓய்ந்திருந்தது, வல்லரசுகளுக்கிடையே சண்டையும் நின்றிருந்தது. அது புதிய சகாப்தத்தின் விடியலாக தோன்றியது; வறுமை, வியாதி, சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் அடியோடு ஒழிக்கும் பாதையில் மனிதவர்க்கம் வீறுநடை போட்டுச் செல்லும் என அநேகர் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். “இப்பொழுதோ அந்த முன்கணிப்புகள் பகற்கனவாக தோன்றுகின்றன” என அந்த அறிக்கை சொல்கிறது. “சண்டையே வராது என நினைத்த இடங்களிலெல்லாம் இப்போது புதுப் புது சண்டைகள் வெடித்திருக்கின்றன; உலகத்தின் வறுமையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இரண்டு புதிய அணு ஆயுத வல்லரசுகள் தோன்றியிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து வருவதை ஐக்கிய நாட்டு சங்கத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அதனால் அதன் மகிமை மங்கிவிட்டது. இப்போது லட்சிய உலகு திகில் உலகாக மாறிக்கொண்டிருக்கிறது.”

மனித முயற்சிகள் எவ்வளவுதான் உயர்ந்தவையாக இருந்தாலும், அவை முழுமையாக வெற்றிபெறாது என்பதை பைபிள் மாணாக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏன் வெற்றிபெறாது? ஏனெனில், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:19) இந்த உலகை பூங்காவனம் போன்ற எழில் கொஞ்சும் பரதீஸாக மாற்றவே கடவுள் படைத்திருக்கிறார், அதை சாத்தானால் சாதிக்க முடியாது.

அதேசமயத்தில், நல்ல நிலைமை வரும் என்ற நம்பிக்கைக்கு ஆதாரம் இருக்கிறது. உலக சமாதானத்தைக் கொண்டுவருவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார். பழைய துணியில் ஒட்டுத் தையல் போட்டு சரிப்படுத்துவது போல இந்த உலகை சரிப்படுத்தப் போவதில்லை, ஆனால் ‘நீதிவாசமாயிருக்கும்’ ‘புதிய பூமியை’ கொண்டுவருவதன் மூலம் சரிப்படுத்தப் போகிறார். (2 பேதுரு 3:13) ஆம், கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் நமது பூமி சமாதானமும் சந்தோஷமும் தழைத்தோங்கும் அழகிய வீடாக மாற்றப்படும். அங்கே கீழ்ப்படிதலுள்ள மனிதர் அனைவருக்கும் வாழ்க்கையும் வேலையும் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கும். மேலும், ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைத்து, இனி மரணமும் துக்கமும் அலறுதலுமில்லாத’ நிலைமையை கொண்டுவரப் போவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். இவை ஆட்டங்காணும் மனித முன்கணிப்புகளின் அடிப்படையில் சொல்லப்பட்டவை அல்ல. மாறாக, பொய்யுரையாத படைப்பாளருடைய வாக்குமாறாத வார்த்தையின் அடிப்படையிலானவை.​—⁠வெளிப்படுத்துதல் 21:4; தீத்து 1:⁠3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்