பைபிள் விநியோகிப்பில் சாதனை
முன்னொருபோதும் இல்லாத அளவில் இன்று அநேகரிடம் பைபிள் இருக்கிறது. இப்படித்தான் யுனைடெட் பைபிள் சொஸைட்டீஸ் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. ஏனெனில் 1998-ல், அதற்கு முந்தைய வருடத்தைவிட பைபிள் விநியோகிப்பு ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. முழுமையாகவோ பகுதியாகவோ, மொத்தமாக 58,50,00,000-க்கும் அதிகமான பைபிள்கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. “அது மகிழ்ச்சிக்குரிய ஒன்று” என அந்த அறிக்கை சொல்கிறது. “இன்று அநேக ஜனங்களை கடவுளுடைய வார்த்தை சென்றெட்டுகிறது.”
பைபிளை வைத்திருப்பதற்கும் அதை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்கர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு பைபிளாவது வைத்திருந்தார்கள், ஒழுக்கநெறி போதனைக்கு பைபிள் சிறந்த புத்தகம் என அதே அளவான ஆட்கள் நம்பினார்கள் என ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது. ஆனால், அறிவுரைக்காக 59 சதவீதத்தினர் மட்டுமே பைபிள் பக்கமாக போவதாக கூறினார்கள். பைபிளைப் பற்றி “அவ்வளவாக” அல்லது “கொஞ்சம்கூட” தெரியாது என 29 சதவீதத்தினர் ஒத்துக்கொண்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் பைபிளை அச்சிட்டு விநியோகிப்பது மட்டுமல்லாமல், 230-க்கும் அதிகமான பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த பைபிள் கல்வி திட்டத்திலிருந்து உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் இப்பொழுது பயனடைந்து வருகிறார்கள். இப்பொழுது எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. இதனால், கடவுளுடைய ராஜ்யத்தில் அனுபவிக்கப் போகும் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதை கற்றுக்கொள்கிறார்கள்.—ஏசாயா 48:17, 18; மத்தேயு 6:9, 10.
[பக்கம் 32-ன் படங்கள்]
வீட்டு பைபிள் படிப்புகள் (மேலே வலமிருந்து இடம்): பொலிவியா, கானா, இலங்கை, இங்கிலாந்து