உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 6/1 பக். 8
  • “தேவனாலே எல்லாம் கூடும்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தேவனாலே எல்லாம் கூடும்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • யெகோவாவின் தவறாத ஆதரவுக்கு நன்றியறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பேரழிவின் மறுபக்கம்
    விழித்தெழு!—1998
  • கடவுளுடைய கவனிப்பினால் நான் எப்படி நன்மையடைந்தேன்
    விழித்தெழு!—1995
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 6/1 பக். 8

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

“தேவனாலே எல்லாம் கூடும்”

வெனிசுவேலாவில் வசிக்கும் ஓர் இளம் பெண்ணின் விஷயத்தில், மத்தேயு 19:26-ல் காணப்படும் இவ்வார்த்தைகள் உண்மையாய் நிரூபித்தன. யெகோவா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டதனால் ஒரு கடும் பிரச்சினையை அவளால் சமாளிக்க முடிந்தது. அவள் விளக்குகிறாள்:

“என் பாட்டிக்கு இரக்க சுபாவம்; ரொம்ப பாசமானவரும்கூட. ஆனால் எனக்கு 16 வயதாயிருக்கும்போதே அவர் இறந்துபோனார். அவருடைய மரணம் எனக்கு பேரிடி. பைத்தியம் பிடித்தவள் போலானேன், வீட்டு வாசற்படியைவிட்டு கீழே இறங்கக்கூட மனதில்லை. கடைசியில் தனிமரம் போலானேன்.

“நான் ஸ்கூலுக்கும் போகவில்லை, எந்த வேலையும் செய்யவில்லை. என் ரூமுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்தேன். எந்த நண்பர்களும் இல்லாமல் தனியாக இருந்ததால் கடும் மனச்சோர்வு என்னை வாட்டியது. எதற்கும் லாயக்கற்றவளாக உணர்ந்ததால் செத்துப்போனால்தான் நிம்மதி என்றுகூட நினைத்தேன். ‘நான் உயிரோடிருந்து என்ன பிரயோஜனம்?’ என்ற கேள்வி என் மனதை வாட்டியது.

“கீசெலா என்ற ஓர் இளம் சாட்சி காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை என் அம்மாவுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வந்தாள். ஒரு நாள் கீசெலா எங்கள் வீட்டைக் கடந்துசென்றதைப் பார்த்த என் அம்மா அவளால் எனக்கு உதவிசெய்ய முடியுமா என்று கேட்டார். கீசெலாவும் முயற்சி செய்ய ஒப்புக்கொண்டாள், ஆனால் நான் அவளைச் சந்திக்க மறுத்துவிட்டேன். கீசெலாவோ மனம் தளர்ந்துவிடவில்லை. அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அவள் என்னுடைய தோழியாக வேண்டும் என்றும் அவளைவிட முக்கியமான இன்னொருவர் என்னுடைய நண்பராக விரும்புவதாகவும் அதில் எழுதியிருந்தாள். அந்த நபர்தான் யெகோவா தேவன் என்று கூறினாள்.

“அது என் நெஞ்சைத் தொட்டதால் அந்தக் கடிதத்திற்கு பதில் போட்டேன். மூன்று மாதங்களுக்கு இவ்வாறே ஒருவருக்கொருவர் கடிதம் எழுதினோம். கீசெலா என்னைத் தொடர்ந்து வற்புறுத்தி, தார்க்கோல் போட்ட பிறகே அவளைச் சந்திக்க எனக்கு தைரியம் வந்தது. அவள் முதல் தடவை என்னை சந்தித்தபோது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை உபயோகித்து பைபிளை என்னோடு படித்தாள். படிப்பு முடிந்தபிறகு உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தாள். எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. நான்கு வருடங்களாக வீட்டு வாசற்படியைவிட்டு கீழே இறங்கியது கிடையாதே! அதனால் வெளியில் செல்லவேண்டும் என்று நினைத்தாலே குலை நடுங்கியது.

“ஆனால் கீசெலா மிகவும் பொறுமையாக இருந்தாள். கூட்டத்திற்கு அவளும் என்னோடு வருவதால் பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை என்று எனக்கு தைரியமூட்டினாள். ஒருவழியாக ஒப்புக்கொண்டேன். ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்தேனோ இல்லையோ கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து வியர்த்துக் கொட்டிவிட்டது. என்னால் யாரையும் பார்த்து வணக்கம் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து கூட்டங்களுக்கு வருவதாக ஒப்புக்கொண்டேன், வாரம் தவறாமல் கீசெலாவும் வந்து என்னைக் கூட்டிச்செல்வாள்.

“என்னுடைய பயத்தை நீக்குவதற்காக கீசெலா என்னைக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கூட்டிக்கொண்டு போவாள். வாசல் அருகே நின்றுகொண்டு கூட்டத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் வரவேற்போம். அப்படி செய்ததனால் ஒரே சமயத்தில் நிறைய பேரை சந்திப்பதற்கு பதிலாக ஒன்று அல்லது இரண்டு பேரை மட்டுமே சந்தித்தேன். இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என நான் நினைத்தபோது மத்தேயு 19:26-ஐ கீசெலா என்னிடம் சொன்னாள்: ‘மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.’

“அது எனக்கு சுலபமாக இல்லைதான் என்றாலும் இன்னும் அதிகமான ஆட்களை ஒரு வட்டார மாநாட்டில் சந்திக்க எனக்கு தைரியம் வந்தது. என்ன ஆச்சரியம், என்னையே என்னால் நம்பமுடியவில்லை! பிறகு, என்னுடைய தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள விரும்புவதாக செப்டம்பர் 1995-ல் மூப்பர்களிடம் கூறினேன். ஆறு மாதம் கழித்து, ஏப்ரல் 1996-ல் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை முழுக்காட்டுதல் எடுப்பதன் மூலமாக அடையாளப்படுத்தினேன்.

“இதைச் செய்ய எனக்கு எங்கிருந்து தைரியம் வந்ததென சமீபத்தில் யாரோ என்னிடம் கேட்டபோது, ‘யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசை என் பயத்தை விழுங்கிவிட்டது’ என்று கூறினேன். இப்போதும் மனச்சோர்வு அவ்வப்போது தலைதூக்குவதுண்டு. ஆனால் ஓர் ஒழுங்கான பயனியராக சேவிப்பதால் என்னுடைய சந்தோஷம் நிரம்பிவழிகிறது. கடந்த காலத்தை நினைக்கையில் கீசெலா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என் மீது அக்கறையுள்ள, ‘என்னைப் பெலப்படுத்துகிற’ நண்பர் ஒருவர் இப்போது எனக்கு கிடைத்திருக்கிறார்.”​—பிலிப்பியர் 4:13.

[பக்கம் 8-ன் படம்]

“யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசை என் பயத்தை விழுங்கிவிட்டது”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்