உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 5/1 பக். 32
  • தீமையை வெல்லுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தீமையை வெல்லுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 5/1 பக். 32

தீமையை வெல்லுதல்

என் தலைவராம் ராஜாவை இந்தச் செத்த நாய் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை சீவியெறிய அனுமதி தாரும்.” இஸ்ரவேலின் சேனைத் தலைவன் அபிசாயின் ஆவேச வார்த்தைகளே இவை. சீமேயி என்னும் பெயருடைய பென்யமீனன் தன் ஆண்டவனாகிய தாவீது ராஜாவை தூஷித்தபோது கோபாவேசத்தோடு இவ்வாறு கூறினார்.—2 சாமுவேல் 16:5-9, NW.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்—இதுவே இன்றைய உலகின் தத்துவம். இதற்கு அபிசாயும் அடிபணிந்து போனார். ஆம், தாவீதை வசைமாரி பொழிந்ததால் சீமேயிக்கு பதிலுக்கு பதில் செய்ய அபிசாய் எண்ணினார்.

ஆனால், தாவீது எப்படி நடந்துகொண்டார்? “அவனை விட்டு விடு; அவன் பழிக்கட்டும்” என்று சொல்லி அபிசாயியை அடக்கினார். தாவீதின்மீது தவறு ஏதும் இல்லாதிருந்தபோதிலும் சீமேயி அபாண்டமாய் பழி சுமத்தியபோதிலும், தாவீது பழிக்கு பழிவாங்கும் எண்ணமின்றி தாழ்மையோடு நடந்துகொண்டார். மாறாக, இதை யெகோவாவின் கரங்களில் விட்டுவிட்டார்.—2 சாமுவேல் 16:10-13.

தாவீதின் மகன் செய்த கலகம் வெற்றி பெறாமல் போகவே, தாவீது மறுபடியும் அரியணையில் அமர்ந்தார். அப்பொழுது, அவரை முதன்முதல் வாழ்த்த வந்ததும் மன்னிப்புக் கோரியதும் சீமேயியே. இந்த முறையும் அபிசாய் அவனை கொல்ல விரும்பினார். ஆனால், தாவீதோ அதற்கு அனுமதிக்கவில்லை.—2 சாமுவேல் 19:15-23.

இந்த சந்தர்ப்பத்தில், இயேசு கிறிஸ்துவின் பிம்பமாக தாவீது பிரதிபலித்தார். இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: ‘அவர் வையப்படும்போது பதில் வையாமல், . . . நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.’—1 பேதுரு 2:23.

இன்று, கிறிஸ்தவர்கள் ‘தீமைக்கு தீமை செய்யாமல், மனத்தாழ்மையோடு இருக்கும்படி’ அறிவுறுத்தப்படுகிறார்கள். (1 பேதுரு 3:8, 9, பொ.மொ.) தாவீதும் இயேசு கிறிஸ்துவும் வைத்த முன்மாதிரியை பின்பற்றி நாமும் தொடர்ந்து ‘தீமையை நன்மையால் வெல்வோமாக.’—ரோமர் 12:17-21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்