சாட்சிகளுக்கு அதிகாரிகள் சூட்டிய மணிமகுடம்
பெய்னிலுள்ள ஒரு துறைமுக நகரம்தான் காதித். இது, மாட்ரிட்டுக்கு தென்மேற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள மேயர் டோனா டியோஃபிலா மார்ட்டினெஸ் என்பவர் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு கேடயத்தை (மேலே காண்பிக்கப்பட்டுள்ளது) பரிசாக வழங்கினார். அதில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருந்தது: “யெகோவாவின் சாட்சிகளுடைய ஒத்துழைப்பையும் முயற்சியையும் பாராட்டும் வண்ணம் இந்த நகரத்தின் சார்பாக காதித் நகர மன்றம் வழங்கியது.” இந்த கௌரவத்தைப் பெற சாட்சிகள் என்ன செய்தார்கள்?
அந்த நகரத்தினுடைய முனிசிபல் ஸ்டேடியத்தின் ஒரு பாகத்தை புதுப்பிப்பதில் சாட்சிகள் செய்த வேலையை பாராட்டி இது வழங்கப்பட்டது. அநேக சனி ஞாயிறுகளில், நூற்றுக்கணக்கான சாட்சிகள் அடித்தளத்திலுள்ள கழிவறைகளை ரீ-மாடல் செய்வதில் உதவினார்கள். குழாய் வசதிகளும் அழகூட்டப்பட்ட தரைகளும் இப்பொழுது அந்த ஸ்டேடியத்தைப் பயன்படுத்துகிற அனைவருக்கும் நன்மையளிக்கிறது.
சிலகாலங்களாக, காதித் நகரத்தோடு யெகோவாவின் சாட்சிகள் நல்ல உறவை அனுபவித்து வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், சாட்சிகளுடைய வருடாந்தர மாவட்ட மாநாட்டிற்காக காரன்ஸா ஸ்டேடியத்தை அந்த நகர மன்றம் அன்புடன் தந்திருக்கிறது. ஆகவே, ஸ்டேடியத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய சாட்சிகள் மனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
ஆனால், எப்பொழுதாவது செய்யும் இது போன்ற உதவியைத் தவிர, நகரத்திலுள்ள ஆட்களை வழக்கமாக சென்று சந்தித்து பொது மக்களுக்கு வேறு வகையிலும் யெகோவாவின் சாட்சிகள் ஆதரவு அளிக்கின்றனர். அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ‘நற்செய்தியை’ அறிவிக்கிறார்கள். மனிதர்கள் புகழ்வதற்காக ஊழியம் செய்வதில்லை. ‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ பிரசங்கிக்கவும் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கவும்’ இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து இதைச் செய்கிறார்கள். (மத்தேயு 24:14; 28:19) இந்த விதத்தில், ‘நீதியின் பாதையில்’ மக்களுக்கு கல்விபுகட்டுவதன் மூலம் சமுதாயத்திற்கு தொண்டாற்றுவதாக நினைக்கிறார்கள்.—நீதிமொழிகள் 12:28.