“நீங்க மட்டுந்தான் கடவுளுக்குப் பிரியமா நடக்கறீங்க”
“கர்த்தர்நிமித்தம்” உலக அதிகாரிகளோடு கிறிஸ்தவர்கள் ஒத்துழைப்பதால், ‘நன்மைசெய்கிறவர்கள் என்ற புகழ்ச்சியை’ எதிர்பார்க்கலாம். (1 பேதுரு 2:13-15) சில காலங்களுக்கு முன் காலேஜ் கேம்பஸ் ஹாலில் நடத்தப்பட்ட மாவட்ட மாநாட்டில் தென் ஆப்பிரிக்க யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்த அனுபவம் கிடைத்தது.
மற்றவர்கள் நடத்தும் மாநாடுகளில் வழக்கமாக பார்க்கிற கோபமூட்டும், ஒத்துழைப்பு தராத பிரதிநிதிகளை சந்திப்பதற்கு மாநாட்டின் முதல்நாளில் காலேஜ் செக்யூரிட்டி போலீஸார் தயாராக இருந்தார்கள். ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் இப்படிப்பட்ட ஆட்கள் ஒருவரைக்கூட பார்க்கவில்லை. அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்!
வழக்கமாக செக்யூரிட்டி போலீஸார் வாசலில் நின்றுகொண்டு ‘செக்’ பண்ணுவதுண்டு. இந்த மாதிரி அன்றைக்கும் அங்கு நுழைந்த எல்லா கார்களையும் சோதனை போட்டு உள்ளே அனுப்பினார்கள். நட்புக்குரிய விதத்தில் வாழ்த்து தெரிவித்ததையும், சோதனை பண்ணியதால் பிரதிநிதிகளுக்கு தாமதமானாலும்கூட பொறுமையாக இருந்ததையும், மரியாதைக்குரிய விதத்தில் நடந்துகொண்டதையும் பார்த்து போலீஸார் ஆச்சரியப்பட்டார்கள். வழக்கமான எதிர்ப்போ வாக்குவாதமோ கெட்ட வார்த்தைகளோ ஒன்றுகூட கிடையாது. “மத்தவங்களைப் போல இல்லாம, எல்லார்ட்டையும் இருக்கவேண்டிய தாழ்மையையும் கண்ணியத்தையும் நீங்க காட்றீங்க” என்று செக்யூரிட்டி ஆபீஸர் ஒருவர் சொன்னார்.
சீஃப் செக்யூரிட்டி ஒருவர் யெகோவாவின் சாட்சிகள் கொடுத்த ஒத்துழைப்பை பார்த்து, கார்களை சோதனைபோட வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்தார். ஏனென்றால், “நீங்க எல்லாருமே நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறீங்க” என்று சொன்னார். அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கார்களை சோதனை போடாமலே உள்ளே அனுமதித்தனர்.
மாநாட்டின் முடிவில், சீக்கிரத்தில் சாட்சிகளை மீண்டும் சந்திப்பதாக அந்த சீஃப் செக்யூரிட்டி நம்பிக்கை தெரிவித்தார். “நல்லவிதமா நடந்துக்கிற இப்படிப்பட்ட ஆட்களை நான் ஒருநாளும் பார்த்ததில்லை” என்று அவர் சொன்னார். “நீங்க மட்டுந்தான் கடவுளுக்குப் பிரியமா நடக்கறீங்க.” இத்தகைய பாராட்டு, மெய் கிறிஸ்தவர்கள் ‘நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ள’ கூடுதலான ஊக்கமளிக்கிறது. இதனால் மக்கள், ‘அவர்கள் நற்கிரியைகளைக்கண்டு தேவனை மகிமைப்படுத்துவார்கள்.’—1 பேதுரு 2:12.