உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 7/1 பக். 7
  • தவறுகளிலிருந்து படிப்பினை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தவறுகளிலிருந்து படிப்பினை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஆவிக்குரிய சுகத்தை அளிக்கும் பாவ அறிக்கை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • ஒழுக்க சுத்தம் — உங்களால் முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • தாவீதின் வீட்டில் பிரச்சினை
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 7/1 பக். 7

தவறுகளிலிருந்து படிப்பினை

கடவுளது தார்மீக சட்டங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்துபவை, மாறாதவை. இதனால்தான் கலாத்தியர் 6:7-ல் உள்ள நியமம் இன்றைக்கும் பொருந்துகிறது; அதாவது, “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” ஒருவர், தான் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என சொல்லலாம். ஆனால், தெய்வீக சட்டம் மாறிவிடுமா என்ன? தனது செயல்களின் விளைவுகளிலிருந்து எந்த மனுஷனாலும் தப்பவே முடியாது.

தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து, இப்போதோ மனந்திரும்பி கடவுளை சேவிக்கும் ஒருவரைப் பற்றியென்ன? அவரும்கூட தான் முன்பு செய்த செயல்களின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் கடவுள் அவரை மன்னிக்கவில்லை என்று அர்த்தமாகாது. தாவீது ராஜா பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தது, அவருடைய வாழ்க்கையை துன்பம் நிறைந்ததாக்கியது. அவற்றிலிருந்து அவரால் தப்பிக்கவே முடியவில்லை. ஆனால் அவர் மனந்திரும்பினார், கடவுளும் அவரை மன்னித்தார்.—2 சாமுவேல் 12:13-19; 13:1-31.

நீங்கள் எப்போதாவது தவறுகள் செய்து, அதனால் தீங்கு அனுபவித்து, மனம் நொந்து போயிருக்கிறீர்களா? நியாயப்படி பார்த்தால், மனம் வருந்தி நொந்துபோவது ‘அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க’ நமக்கு உதவும் என்றே சொல்லலாம். (யோபு 36:21) ஆம், நாம் மனம் வருந்தினால் மீண்டும் அதே தவறை செய்யாமல் இருப்போம். இன்னொரு நன்மையும் இருக்கிறது. தாவீது, பாவத்தினால் கிடைத்த படிப்பினையை தன் நன்மைக்காக மட்டுமின்றி மற்றவர்களது நன்மைக்காகவும் பயன்படுத்தினார். அவர் சொன்னார்: “அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.”—சங்கீதம் 51:13.

[பக்கம் 7-ன் படங்கள்]

பத்சேபாளுடன் செய்த பாவம் தாவீதுக்குப் படிப்பினை தந்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்