நல்நடத்தை சூட்டும் புகழ் மாலை
“மாட்டெரா—வினோத குகை வீடுகளின் நகரம்” என்ற கட்டுரையை பிரசுரித்ததற்காக இத்தாலிய செய்தித்தாள் லா கெட்ஸட்டா டெல் மெட்ஸோஜோர்னோ யெகோவாவின் சாட்சிகளை பாராட்டியது. இக்கட்டுரை ஜூலை 8, 1997, விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்தது, இது அநேக மொழிகளில் அச்சிடப்பட்டு பெருமளவில் விநியோகிக்கப்பட்டது. விழித்தெழு! தற்போது 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது, உலகமுழுவதும் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. “[மாட்டெரா] நகரத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற, கலையழகுமிக்க பரம்பரைச் சொத்துக்களின் மேம்பாட்டுக்காக விளம்பரம் செய்வதில்” அந்தக் கோடை காலத்தில் விழித்தெழு! பத்திரிகை மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
அந்தச் செய்தித்தாள், மாட்டெராவில் 1997-ல் நடைபெற்ற “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாடு சம்பந்தமாக சாட்சிகளுக்குப் புகழ் மாலை சூடியது. சாட்சிகள் “கோடைகாலத்தின் மத்தியிலும் வாட்டுகிற உஷ்ணத்திலும் [அந்நகரத்தின்] XXI செட்டெம்ப்ரே ஸ்டேடியத்தில் 4,000 ஆட்கள் கூடிவரும்படி செய்தனர்; அவர்கள் சுத்தம் செய்தல், மறுபடியும் பெயின்ட் அடித்தல், இந்த விளையாட்டு மையத்தின் அடிப்படை தரத்தை உயர்த்துதல் (முக்கியமாய் கழிப்பறை வசதிகள்) ஆகியவற்றை எவ்வித கட்டணமுமின்றி செய்துகொடுத்தனர். அதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு தங்கள் சொந்த பணத்தை செலவழித்தனர்” என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது.
யெகோவாவின் சாட்சிகள் நல்ல அயலாராக இருக்க முயற்சி செய்கின்றனர். (மத்தேயு 22:37-39) இவ்வாறு அவர்கள் பைபிளின் புத்திமதியையும்கூட பின்பற்றுகின்றனர்: “அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12.
உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும்கூட கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் மனிதகுலத்துக்கான அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து, நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். கூடுதல் தகவலைப் பெறுவதற்கு அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்கு யாராவது உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.