“நீ குழந்தைப் பருவமுதல் அறிந்திருக்கிறாய்”
சமீப அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, குழந்தைகளுடன் பேசுவது அவர்களுடைய மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது; அவர்களுடைய சிந்திக்கும், நியாயங்காட்டும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமை வளரும்படி தூண்டுவிக்கிறது. இது, முக்கியமாக ஒரு குழந்தையினுடைய வாழ்க்கையின் முதல் ஆண்டில் உண்மையாக உள்ளது. “ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை கேட்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை, பிற்காலத்தில் அறிவுக்கூர்மை, பள்ளியில் வெற்றி, சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை கணிக்கும் மிக முக்கிய காரணியாக உள்ளது” என சில ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது கருதுவதாக இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிப்யூன் அறிவிக்கிறது.
என்றபோதிலும், பேசப்படும் வார்த்தைகள் ஓர் ஆளிடமிருந்து வரவேண்டும். ஒரு டெலிவிஷனோ ரேடியோவோ இதை ஈடுசெய்ய முடியாது என தெரிகிறது.
அ.ஐ.மா., சீயட்டிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நரம்பு சம்பந்தப்பட்ட இணைப்புகள் வாழ்க்கையில் மிக ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகின்றன எனவும், எவ்வாறு இணைப்புகள் நடைபெறுகின்றன என்பதை தீர்மானிப்பதற்கு சொல்லர்த்தமாகவே அனுபவங்களுக்காக குழந்தையின் மூளை காத்துக்கொண்டிருக்கிறது எனவும் நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம். இந்தச் செயல்முறை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பமாகிறது என்பதை மிகச் சமீபகாலம் வரை நாம் உணரவில்லை. உதாரணமாக, குழந்தைகள் ஆறு மாதங்களுக்குள்ளாகவே தங்களுடைய தாய்மொழியின் தொனிகளைக் கற்றுக்கொள்கின்றன.”
குழந்தைகளுக்கு வெறுமனே அன்பை பொழிந்தாலே அவர்கள் அறிவுப்பூர்வமாய் செழித்தோங்குவார்கள் என்று சொல்லப்பட்ட பரவலான கருத்தை சமீப ஆராய்ச்சி எதிர்த்து வாதிடுகிறது. பிள்ளையின் வளர்ச்சியில் பெற்றோருடைய பங்கின் முக்கியத்துவத்தையும்கூட அது சிறப்பித்துக் காட்டுகிறது.
இது, தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் ஏவுதலினால் எழுதிய கடிதத்தின் வார்த்தைகளை நம்முடைய ஞாபகத்திற்கு கொண்டுவருகிறது: “உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கும் பரிசுத்த வேத எழுத்துக்களை நீ குழந்தைப் பருவமுதல் அறிந்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியும்.” குழந்தை தீமோத்தேயுவின் தாயும் பாட்டியும் விசுவாசத்திலிருந்தனர்; இவர்கள் அவருடன் பேசிய பரிசுத்த வேத எழுத்துக்கள், கடவுளுடைய சிறந்த ஊழியக்காரராக தீமோத்தேயு வளர்வதில் முக்கிய பாகத்தை வகித்திருக்கலாம்.—2 தீமோத்தேயு 1:5; 3:15, NW.
உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும்கூட கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் மனிதகுலத்துக்கான அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து, நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். கூடுதல் தகவலைப் பெறுவதற்கு அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்கு யாராவது உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.