உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 11/1 பக். 32
  • ‘ஆழமான தண்ணீரை’ மொண்டெடுத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘ஆழமான தண்ணீரை’ மொண்டெடுத்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 11/1 பக். 32

‘ஆழமான தண்ணீரை’ மொண்டெடுத்தல்

பைபிள் பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ [“பகுத்துணர்வுள்ளவனோ,” NW] அதை மொண்டெடுப்பான்.” (நீதிமொழிகள் 20:5) இன்று அநேக நாடுகளில் இருப்பதைவிட, பைபிள் காலங்களில் தண்ணீரை மொண்டெடுப்பது மிகவும் கஷ்டம். சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசியபோது அவள் யாக்கோபின் கிணற்றிலிருந்து—சுமார் 23 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து—தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாள்!—யோவான் 4:5-15.

நீதிமொழிகள் 20:5 சுட்டிக்காட்டுகிறபடி, ஓர் ஆளின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் ஆழ்ந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியே கொண்டுவர தேவைப்படும் பகுத்துணர்வு, ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் முயற்சிக்கு ஒப்பாக உள்ளது. வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களில் இது உண்மையே. உதாரணமாக, பல ஆண்டுகளாய் அறிவையும் அனுபவத்தையும் களஞ்சியமாய் சேர்த்து வைத்திருக்கிற ஆட்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். கேட்காமலேயே அறிவுரைகளை வழங்க முன்வரும் மனச்சாய்வு இப்படிப்பட்டவர்களுக்கு இல்லையென்றால், நீங்கள் அவற்றை வெளிக்கொணர வேண்டியதாய் இருக்கலாம். ஆர்வம் காட்டுவதன் மூலமும் கேள்விகள் கேட்பதன் மூலமும் சாமர்த்தியமாய் துருவிக் கேட்பதன் மூலமும், வேறுவார்த்தையில் சொல்லப்போனால், நீங்கள் ஞானம் என்ற ஆழ்கிணற்றுக்குள் உங்கள் பக்கெட்டை இறக்கிக்கொண்டிருப்பீர்கள்.

நீதிமொழிகள் 20:5-ல் உள்ள அறிவுரை குடும்பத்திற்கும்கூட பொருந்துகிறது. அடிக்கடி மனைவிகள் இவ்வாறு சொல்கிறார்கள்: “மனசுல என்னதான் நினைக்கிறாரென்றே என் வீட்டுக்காரர் எங்கிட்ட சொல்றதில்ல!” கணவன் இவ்வாறு சொல்லக்கூடும்: “என் வீட்டுக்காரி ஊமையாட்டம் இருந்திடுவா!” இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், கணவனின் அல்லது மனைவியின் இருதயத்தில் புதைந்துகிடக்கிற ஆழமான எண்ணங்களை மொண்டெடுக்க பகுத்துணர்வு அவசியம். சாமர்த்தியமான கேள்விகள் (இன்னைக்கு உனக்கு ஏதாவது கஷ்டமா இருந்துச்சா? என்ன நடந்துச்சு? நான் ஏதாவது செய்யணுமா?) மனம்விட்டு பேசுவதற்கு வழிவகுக்கும். இத்தகைய பகுத்துணர்வைக் காண்பிப்பது, திருமண பந்தத்தைப் பலப்படுத்தி, கணவன், மனைவி ஆகிய இருவருக்குமே நன்மையுண்டாக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்