“சத்தியத்தின் மணிக்கற்கள்”
“சத்தியத்தின் மணிக்கற்கள்.” யெகோவாவின் சாட்சிகளுடைய நைஜீரியா கிளைக்காரியாலயம் பெற்றுக்கொண்ட கடிதம், இரண்டு விசேஷமான பத்திரிகைகளை அப்படித்தான் விவரிக்கிறது. அதை எழுதிய இளைஞர் இவ்வாறு விளக்குகிறார்:
“காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் வாயிலாக அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உண்மையில் கையாளுவதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக நான் எழுதுகிறேன்.
“எனக்கு 17 வயதாகிறது. கடந்த ஆண்டு, ‘பாலுறவைக் காட்டிலும் அன்பு அதிகத்தை உட்படுத்துகிறது—எய்ட்ஸ் நிஜமானது’ என்ற தலைப்பின் பேரில் உள்ளூர் வானொலி நிலையம் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. ஒவ்வொரு கட்டுரையும் நானூறு வார்த்தைகளுக்கு குறைவாக இருத்தல் கூடாது. மிகச் சிறந்த கட்டுரைக்கு கொடுக்கப்படவிருந்த பரிசு 1,000 நைரா [அமெரிக்க டாலரில் 12.50] ஆகும். வெறுமனே ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக எழுதாமல், ஏதாவது கற்றுக்கொள்வதற்காக எழுதவேண்டும் என்பதாக வானொலி நிலையத்தார் சொன்னார்கள். . . .
“எய்ட்ஸ் பற்றி எனக்கு இரண்டு பத்திரிகைகளிலுமே தகவல் கிடைத்தது. அன்பைக் குறித்து அதிகமான எண்ணிக்கையில் கட்டுரைகள் இருந்தன. ஆகஸ்ட் 8, 1978, ஆங்கில விழித்தெழு!-விலிருந்து நான் குறிப்புகளைப் பயன்படுத்தினேன்.
“என்னுடைய கட்டுரையை அனுப்பி இரண்டே மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. க்ராஸ் ரிவர் மற்றும் அக்வா ஐபாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் நான் முதல் இடத்தில் வந்தேன்!
“நான் பயன்படுத்திய எல்லா தகவலும் இவ்விரு பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்டதே. குழப்பங்கள் நிறைந்த, சீரழிந்துவிட்ட இந்த உலகில் காலத்திற்கேற்ற தகவலை நமக்கு யெகோவா அளித்துவருவது உண்மையில் அதிசயமாயுள்ளது. உண்மைக் கிறிஸ்தவர்களாக, பாலுறவைக் காட்டிலும் அன்புக்கு அதிகம், அதிகமதிகம் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிச்சயமாகவே, சுத்தமான, ஒழுக்கமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வது எய்ட்ஸ் போன்ற நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
“சலிப்படையாமல் நீங்கள் அளித்துவரும் சத்தியத்தின் இந்த மணிக்கற்களுக்காக நன்றிசொல்லாமல் என்னால் இருக்கமுடியாது. அருமையான இந்தப் பத்திரிகைகளை நீங்கள் தொடர்ந்து அளித்துவருகையில் யெகோவா உங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.”