இதைப்போன்ற காட்சிகளிலிருந்து நாம் என்றாவது விடுபடுவோமா?
இந்நாட்களில் எங்கு சென்றாலும், நெருக்கடிநிலை, சண்டை சச்சரவு, மற்றும் போர் காட்சிகளையே நாம் காண்கிறோம். ஆனால், நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிற கெட்ட செய்திகளின் பட்டியலுடன் மேலும் சிலவற்றை கூட்டுவது இந்தப் பத்திரிகையின் நோக்கமல்ல. மாறாக, இந்தப் பிரத்தியேக இதழ், ஆறுதலான இரண்டு உண்மைகளையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்தும். முதலாவதாக, நம் சகாப்தத்தின் திடுக்கிடச் செய்யும் கெட்ட செய்திகளில் பெரும்பான்மையானவற்றை, பைபிளிலுள்ள பூர்வ தீர்க்கதரிசனங்கள் உண்மையில் முன்னறிவித்தன என்பது; இரண்டாவதாக, இங்கு படமாகக் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற இத்தகைய காட்சிகள் கடந்தகால சரித்திரமாகிவிடும் ஒரு நாளை இதே தீர்க்கதரிசன புத்தகம் முன்னறிவிக்கிறது என்பது. போர்கள் இனிமேலும் இல்லை, குண்டுவீச்சுகளோ, மறைந்திருந்து சுட்டுக்கொல்வதோ, கண்ணிவெடிகளோ, பயங்கரவாத ஆட்சியோ இனிமேலும் இல்லை. கடுந்துயரத்திலிருக்கும் அனாதைகளோ, வீடற்ற அகதிகளோ இனிமேலும் இல்லை. உண்மையாக, இருதயத்தை ஆறுதல்படுத்தும் சமாதானமுள்ள ஓர் உலகம். அத்தகைய ஒரு காலத்தைக் காண நீங்கள் விரும்புவீர்களா? பைபிள் என்ன சொல்வதற்கு இருக்கிறதென்பதைக் கவனிக்கும்படி நாங்கள் உங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். சாத்தியமாக இருக்குமா என்று நீங்கள் என்றாவது நினைத்திருந்தால் அதற்கு மேலாக மிக அதிகமான ஆறுதலை நீங்கள் அதில் கண்டடையலாம்.