இதயத்தைத் தொடும் அந்த ஒரு பத்திரிகை
தகவல்களின் பேரில் அல்லது பொழுதுபோக்கில் வாசகருக்கு உள்ள ஆர்வத்தை திருப்திப்படுத்த எண்ணற்ற பத்திரிகைகள் உலகெங்கும் பிரசுரிக்கப்படுகின்றன.
உங்கள் கையிலிருக்கும் பத்திரிகையை தனித்துநிற்கும் ஒன்றாக ஆக்குவது எது? ஜெர்மனியிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு கிடைத்த பின்வரும் கடிதம் ஒருவேளை பதிலை அளிக்கக்கூடும்:
“அருமையான சகோதரர்களே, உங்களது முயற்சிகளுக்கும் தொண்டுக்கும் மிக்க நன்றி. என்னுடைய இரு மகன்களும் நானும் கூட்டத்திலிருந்து வந்தபோது, இரவு 9:30 மணி ஆகியபோதிலும், என்னால் காவற்கோபுரத்தை [ஆடியோகேஸட்டில்] கேட்காமல் இருக்க முடியவில்லை. நான் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டே முதல் படிப்புக் கட்டுரையை (ஏப்ரல் 1, 1995) கேட்க ஆரம்பித்தேன். அதை இன்னும் ஒரு தடவை கேட்கவேண்டும் என நான் உணர்ந்தேன், ஆகவே சமையலறையில் என் வேலையை நிறுத்திவிட்டு, டேப்பை ஓடவிட்டு கூடவே காவற்கோபுரத்திலிருந்து அந்தக் கட்டுரையைப் [“கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!”] படித்தேன். அது என் இதயத்தைத் தொட்டது, விசேஷமாக நான்காவது ஐந்தாவது பத்திகள். பிறகு கண்ணீர் பெருக்கெடுக்க துவங்கியது—ஆனால் நீண்ட நேரத்திற்கு அல்ல. நான் உயிரோடு இருப்பதற்கும், அவருடைய மக்களில் ஒருத்தியாக இருப்பதற்கும், இத்தனை அநேகருடன் சேர்ந்து அவரது நாமத்தை அறிவிக்க முடிவதற்கும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். உண்மையிலேயே, மதிப்பற்றவராக உணருவதற்கு ஒரு காரணமும் இல்லை. யெகோவாவின் ஆவி அவரது மக்களுடன் இருக்கிறது. நாம் அனைவரும் சகித்திருந்து, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்து, ஒன்றுபட்டு நிற்போமாக. கிறிஸ்தவ அன்புடன் முடிக்கிறேன், இப்படிக்கு விசுவாசத்திலுள்ள உங்கள் சகோதரி.”
காவற்கோபுரம் தகவலைக்காட்டிலும் அதிகத்தை கொடுக்கிறது. இது வாசகரின் இதயங்களைத் தொட்டு, ஆவிக்குரிய போஷாக்குக்காகவும் காலத்திற்கேற்ற உற்சாகமூட்டுதலுக்காகவும் அவர்களுக்கிருக்கும் ஆவலைத் திருப்திப்படுத்துகிறது. ஆம், காவற்கோபுரம் ‘ஏற்றவேளையிலே . . . போஜனம்’ கொடுக்கிறது.—மத்தேயு 24:45.