நீங்கள் அதைத் தவறவிட விரும்பமாட்டீர்கள்!
எதைத் தவறவிடுவதை? விரைவாக வந்துகொண்டிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டை! பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9:30-க்கு இசையோடு மாநாடு துவங்கும். “சமாதானத்தின் வைராக்கியமான அறிவிப்பாளர்களிடமிருந்து கேட்டல்” என்ற பகுதியின்போது, விசுவாசத்தைப் பலப்படுத்தும் நேர்முக அனுபவங்களைக் கேட்டப்பிறகு, “கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?” என்ற உற்சாகமளிக்கும் பேச்சை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள்.
“தேவ சமாதான தூதுவர்களாக நமது பங்கு” என்ற ஊக்குவிக்கும் முக்கியப் பேச்சு வெள்ளிக்கிழமை மதியவேளையின் சிறப்பு அம்சமாக இருக்கும். அதன்பிறகு, “கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை கற்றுக்கொள்ள பிறருக்கு உதவுதல்” என்ற பகுதி புதியவர்களுக்குப் போதிப்பதன் பேரில் ஆலோசனைகளை வழங்கும். இதைப் பின்தொடர்ந்து, “பொழுதுபோக்கின் மறைவான கண்ணிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” என்ற காலத்திற்கேற்ற தொடர்ப்பேச்சு கொடுக்கப்படும். வெள்ளிக்கிழமையின் நிகழ்ச்சிநிரல், “பிசாசை எதிர்த்திடுங்கள்—எந்தப் போட்டியையும் பொறுத்திட வேண்டாம்” மற்றும் “கடவுளுடைய வார்த்தையின் உண்மைத்தன்மையை பற்றுறுதியுடன் ஆதரித்தல்” ஆகிய பேச்சுக்களுடன் முடிவடையும்.
சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல், “சமாதானத்தின் சுவிசேஷத்தைக் கொண்டுவரும் தூதுவர்கள்” என்ற மூன்று பகுதி தொடர்ப்பேச்சில் சீஷராக்கும் வேலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். “யெகோவாவின் அமைப்பிற்குள் மகிழ்ச்சியோடு கொடுத்தல்,” “ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் மூலம் ஜீவனும் சமாதானமும்,” ஆகிய பேச்சுக்கள் அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்யும். இதற்குப்பிறகு, புதிய சீஷர்களுக்கு முழுக்காட்டப்படும் வாய்ப்பு இருக்கும்.
சனிக்கிழமை மதியம் கொடுக்கப்படும் “காரியங்களின்பேரில் யெகோவாவின் எண்ணங்களைச் சிந்தித்துப்பாருங்கள்” என்ற பேச்சு, ‘இன்று கிறிஸ்தவர்கள் பிரிக்கும் வேலையில் பங்கேற்கிறார்களா?’ மற்றும் ‘மரண தண்டனையைப்பற்றி பைபிளின் கருத்து என்ன?’ போன்ற கேள்விகளுக்குப் பதிலை அளிக்கும். “சமாதானத்தின் தேவன் உங்கள்மீது அக்கறைகொள்கிறார்” என்ற இருதயத்திற்கு அனலூட்டும் இரண்டு பகுதி தொடர்ப்பேச்சையும்கூட நீங்கள், விசேஷமாக “குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாடுங்கள்” என்ற முடிவான பேச்சையும் அனுபவித்து மகிழ்வீர்கள்.
“சரியான வகையான தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்” என்ற மூன்று பகுதி தொடர்ப்பேச்சும், “கடவுளுடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள் மற்றும் கீழ்ப்படியுங்கள்” என்ற பேச்சும் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிநிரலில் அடங்கும். அந்தக் காலை நிகழ்ச்சிநிரல், முழு-ஒப்பனை நாடகத்துடன் முடிவுறும், அந்த நாடகம் நியாயாதிபதியாகிய கிதியோனைப்பற்றிய பைபிள் பதிவிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளை வெளிக்கொணரும்.
ஞாயிற்றுக்கிழமை மதியம், மாநாட்டின் முடிவான நிகழ்ச்சிநிரல், “மெய் சமாதானம் இறுதியில்!—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” என்ற தலைப்பையுடைய பொதுப் பேச்சை சிறப்பு அம்சமாக கொண்டிருக்கும். இறுதியில், “தேவ சமாதான தூதுவர்களாக முன்னேறுதல்” என்ற உந்துவிக்கும் பேச்சு மாநாட்டை முடிவுக்குக் கொண்டுவரும்.
ஆஜராவதற்கு இப்போதே திட்டமிடுங்கள். உங்களுடைய இருப்பிடத்திற்கு மிக அருகாமையில் நடைபெறும் இடத்தை அறிவதற்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள். இந்தியாவில் மாநாடு நடைபெறும் இடங்களை ஜூன் 8 விழித்தெழு! இதழ் பட்டியலிடும்.