1996 “தேவ சமாதான தூதுவர்கள்” மாநாடு
பண்டைய காலங்களில் மூன்று பெரும் பண்டிகைகளை யெகோவாவின் மக்கள் வருடந்தோறும் கொண்டாடினார்கள். அவ்விதமாகவே, யெகோவாவின் பெயரைத் தாங்கிய நவீன காலத்து மக்கள் சந்தோஷகரமான தருணங்களுக்காக வருடத்தில் மூன்று தடவை கூடிவருகிறார்கள். ஒருநாள் விசேஷ மாநாட்டு தினத்திற்கும், இரண்டு நாள் வட்டார மாநாட்டுக்கும், மூன்று அல்லது நான்கு நாள் மாவட்ட மாநாட்டிற்கும் கூடிவருதலை அவர்கள் அனுபவித்து மகிழ்கிறார்கள். இவ்வருட மாவட்ட மாநாட்டின் கருப்பொருள் “தேவ சமாதான தூதுவர்கள்.”
இந்தக் கருப்பொருள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! நமது கடவுளாகிய யெகோவா, “சமாதானத்தின் தேவன்,” ஆம், “சமாதானத்தை அளிக்கும் கடவுள்.” நமது தலைவர், இயேசு கிறிஸ்து “சமாதானப்பிரபு;” யெகோவாவின் ஊழியர்கள் கொண்டுவரும் செய்தி, தேவ சமாதான செய்தியாக உள்ளது. (பிலிப்பியர் 4:9; ரோமர் 15:33, NW; ஏசாயா 9:6; நாகூம் 1:15) ஒரு அருமையான மாநாட்டு நிகழ்ச்சிநிரல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அது தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தை இன்னும் முழுமையாக மதித்துணர அனைவருக்கும் உதவும்.
இவ்வருடம் இந்தியாவில் மாத்திரம் 15 மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. ஒருவேளை உங்களுக்கு அருகாமையிலும் மாநாடு நடைபெறலாம். அது சரியாக எப்போது, எங்கு நடைபெறும் என்பதை உங்கள் அயலகத்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளிடம் விசாரித்து அறிந்து, ஆஜராக ஏன் திட்டமிக்கூடாது? மெய்யான, நிலைத்திருக்கும் சமாதானத்தில் ஆர்வமுள்ள அனைவரும் அனலான வரவேற்பைப் பெறுவார்கள்.