“இது யெகோவாவின் செயல்”
மெக்ஸிகோவிலுள்ள மான்டெர்ரியில் எல் நார்ட் என்ற ஒரு செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் தலைப்பாக அது இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய மாநாட்டு மன்றத்தைப் பற்றியதுதான் அந்தக் கட்டுரை.
மெக்ஸிகோவின் வடதிசைப் பகுதியில் உள்ள 23,00,000 (சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்களையும் சேர்த்து) என்ற ஜனத்தொகையைக் கொண்ட நகரம்தான் மான்டெர்ரி. அது 19,200 ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக, 3,000 சௌகரியமான இருக்கைகளையும் ஏர்-கண்டிஷன் வசதியையும் கொண்ட அழகான, நடைமுறைக்கு பயனுள்ள ஒரு மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதற்கு சாட்சிகள் தங்களுடைய முயற்சிகளை ஒன்றாக சேர்த்திணைத்தனர். பிரதிஷ்டைப் பேச்சை யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஒரு அங்கத்தினர் அளித்தபோது உள்ளூர் சாட்சிகள் சந்தோஷமடைந்தனர். மான்டெர்ரியில் செய்யப்படும் வேலையைக் குறித்த ஒரு சுருக்கமான விவரத்தை நிகழ்ச்சிநிரல் உட்படுத்தியது. கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் பேட்டிகளும் இருந்தன. பின்பு கூட்டத்திற்கு ஆஜராயிருந்த 4,500 பேர் பிரதிஷ்டை பேச்சை அனுபவித்தனர்.
“அதிகமான, பெரிய அளவிலான, மேம்பட்ட ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும்” அளிக்கும் ஒன்றாக விளக்கப்பட்டிருக்கும் மெக்ஸிகோவில் சமீபத்தில் கட்டப்பட்ட மாநாட்டு மன்றங்களில் இது மூன்றாவதாகும்.
மெக்ஸிகோவில் 4,43,000-க்கும் மேலான பிரஸ்தாபிகளோடும், 1995-ல் நினைவு ஆசரிப்பின்போது 14,92,500 என்ற ஆஜர் எண்ணிக்கையோடும், மான்டெர்ரியிலுள்ளதைப்போன்ற புதிய மாநாட்டு மன்றங்கள் நிச்சயமாகவே தெய்வீக நோக்கத்தைச் சேவிக்கும்.