உலகை கடவுள் ஆட்சி செய்கிறாரா?
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. அநேகர் படுக்கையை விட்டு எழுந்து, உடை மாற்றிக்கொண்டு, காலையுணவை சாப்பிட்டுவிட்டு, அவசர அவசரமாக சர்ச்சுக்குச் செல்கிறார்கள். அதிகாரத்தில் தமக்கு ஈடாக எவரும் இல்லாதவராகக் கடவுள் எப்படி பூமியின்மீது உன்னதராக ஆட்சி செய்கிறார் என்பதைப்பற்றி ஒரு பிரசங்கத்தை அங்கு அவர்கள் கேட்கிறார்கள். அவர் மக்களில் ஆழ்ந்த அக்கறைகொள்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் பேசப்படுகிறது. எல்லா முழங்கால்களும் கீழ்ப்படிதலுடன் அவரிடம் மண்டியிடக்கூடிய ராஜாதி ராஜாவாக அவர் இருக்கிறார் என்று அங்கு சொல்லப்படுவதை அவர்கள் கேட்கக்கூடும்.
சர்ச்சிலிருந்து வீடு திரும்பியதும், இந்த ஆட்கள் தங்கள் தொலைக்காட்சி பெட்டியில் செய்தியைக் கவனிக்கக்கூடும். இப்போது அவர்கள் பஞ்சம், குற்றச்செயல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், வறுமை ஆகியவற்றைக் குறித்துக் கேட்கிறார்கள். நோய் மற்றும் சாவின் பரிதாபக் காட்சிகளைக் காண்கிறார்கள்.
சர்ச்சில் கேட்ட காரியங்களைப் பற்றி, விசேஷமாக அங்கு விளக்கப்படாமல் விடப்பட்ட காரியங்களைப் பற்றி அவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கக்கூடும். கடவுள் அன்புள்ளவராகவும் எல்லா வல்லமையும் உடையவராகவும் இருந்தால், பயங்கரமான காரியங்கள் ஏன் நிகழ்கின்றன? மேலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி என்ன? தெளிவாகவே, அவரிடம் கீழ்ப்படிதலுடன் மண்டியிடாத அநேக முழங்கால்கள் இருக்கின்றன.
[பக்கம் 3-ன் படம்]
உலகத்தை கடவுள் ஆட்சி செய்கிறாரென்றால், ஏன் இவ்வளவு துன்பமும் குழப்பமும் இருக்கிறது?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: NASA photo