“நிதான புத்தியின் எல்லைகளுக்கு அப்பால்”
“பேர்கள் மனிதரின் மனங்களில் துவங்குவதால், மனிதரின் மனங்களிலேயே சமாதானத்தின் அரண்களை நாம் எழுப்பவேண்டும்.” (ஐநா கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தின் சாசனம்) இந்தக் கூற்றை மனதில் கொண்டு, 1993-ல் 500-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆயுதக்குறைப்பு பற்றிய ஐநா மாநாடு ஒன்றில், அப்படிப்பட்ட அரண்களைக் கட்டுவதில் மதம் வகிக்கும் பாகத்தைக் குறித்துச் சிந்தித்தனர்.
உலக பாதுகாப்பிற்கான வழக்கறிஞர்களின் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்த ஜானத்தன் கிரனாஃப் அந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். அவர் குறிப்பிட்டார்: “தற்போதைய மத மற்றும் இனக் கலவரத்தின் அளவு, நாகரிகமான நடத்தையின் எல்லைகளுக்கு அப்பால் செல்வதாக, ஒருவேளை நிதான புத்தியின் எல்லைகளுக்கு அப்பால் செல்வதாக இருக்கிறது.” அந்த மாநாட்டின்போது ஜான் கெனத் கால்பிரெய்த்தின் வார்த்தைகள் பொருத்தமாகவே மேற்கோளாக காட்டப்பட்டன: “எல்லா போர்களிலும் இயற்கை சேதங்களிலும் சேர்த்து மொத்தமாகக் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும் மதத்தின்பேரில் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.”
டாக்டர் சேஷாகிரி ராவ் இவ்வாறு சொன்னார்: “மருத்துவர்கள் நோய்களைக் குணப்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டுமே தவிர அவற்றைப் பரப்புகிறவர்களாக இருக்கக்கூடாது. மதப் பாரம்பரியங்கள் ஒன்றுக்கொன்று விரோதமாக பகையையும் வன்முறையான சண்டையையும் பரப்புவதற்காக இருக்கக்கூடாது. அவை ஒப்புரவாக்கும் சக்திகளாக இருக்க வேண்டியவை. ஆனாலும் நடைமுறையில், அவை பெரும்பாலும் பிரிக்கும் சக்திகளாகச் செயல்பட்டிருக்கின்றன; இன்னும் செயல்படுகின்றன.”
“இன்றைய சர்ச்சுகள் ஒன்றுசேர்ந்து போரைக் கண்டனம் செய்யும் ஓர் அறிவிப்பைச் செய்ய முடிந்தால்,” நிச்சயமாக சமாதானம் ஏற்படும் என்று சில வருடங்களுக்கு முன்னர் லண்டனின் காத்தலிக் ஹெரால்ட் குறிப்புத் தெரிவித்தது. என்றபோதிலும், அந்தச் செய்தித்தாள் மேலுமாக இவ்வாறு சொன்னது: “இது ஒருபோதும் நிகழாது என்று நமக்குத் தெரியும்.” கத்தோலிக்க கன்னியாஸ்திரீ ஒருவர் இவ்வாறு ஒருமுறை குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகளைப் போன்று, . . . நாமெல்லாரும் ஒருநாள் காலையில், மீண்டும் போரில் ஈடுபடமாட்டோம் என்ற ஓர் உறுதியான தீர்மானத்துடன் எழுந்தால் இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கும்!”
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Tom Haley/Sipa Press