யெகோவா பூமியைக் காப்பாற்றுவார்
மால்தீவ்ஸைச் சேர்ந்த ஒரு தீவிலிருக்கும் விமான நிலையம் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக மூடப்பட்டிருக்கிறது. ஏன்? ஏனெனில் உயர் ஓதத்தின்போது, விமான ஏற்ற இறக்க ஓடுபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் விமானங்கள் தரையில் இறங்குவது ஆபத்தானதாயிருக்கும். சில விஞ்ஞானிகளின் பயம் என்னவென்றால் மால்தீவ்ஸிய தீவுகளில் கடல்மட்டம் அடுத்த நூற்றாண்டில் குறைந்தபட்சம் ஒரு மீட்டராவது உயரும். இது அற்ப அளவாக தோன்றியபோதிலும், அத்தகைய உயர்வு வரைபடத்திலிருந்து ஏழு தீவு நாடுகளை துடைத்தழிக்கும். நிச்சயமாகவே, யுஎன் கிரானிக்கல் பிரகாரம், இரண்டு மீட்டர் அதிகரிப்பு முழு தீவுக்கூட்டத்தையே உண்மையில் புதைத்துப்போடும், சுமார் 1,200 தீவுகளை!
கடல் மட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, “கண்ணாடிக் கூண்டின் அனல் வாயுக்களால்” பூமியின் வளிமண்டலம் மாசடைவது வெப்பமான பகுதியிலுள்ள கடல்களை விரிவடையச் செய்து, பனிமூடிகளையும் பனிப் படலங்களையும் உருக வைத்து, இப்படியாகக் கடல் மட்டங்கள் அதிகரிக்கச் செய்கிறது. லண்டனிலுள்ள பேனஸ் நிறுவனம் என்ன சொல்கிறதென்றால், மாசு “நிலத்தினுடைய, கடலினுடைய எல்லைகளையே மாற்றியமைக்கக்கூடிய, மெதுவாக ஏற்படும் பூகோள அழிவுக்கு விசையூட்டியிருக்கலாம்.”
உலகளாவிய கணப்பு இருப்பது விஞ்ஞானிகளின் மத்தியில் இன்னும் விவாதநிலையில் உள்ளது. என்றபோதிலும், கடவுளுடைய நோக்கத்தைச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இடைமறிக்காது என்பதன்பேரில் நாம் உறுதியாயிருக்கலாம். “அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்,” என்று பைபிள் சொல்கிறது. (1 நாளாகமம் 16:30) பூமியின் சுற்றுப்புற சூழ்நிலை யெகோவாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அழிவிலிருந்து பூமியையும் மனிதவர்க்கத்தையும் அவர் சீக்கிரத்தில் காப்பாற்றுவார் என்பதன்பேரில் நாம் சந்தோஷமடையலாம்.—சங்கீதம் 24:1, 2; 135:6; 2 பேதுரு 3:13.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Drawing based on NASA photo