பொல்லாதவர்கள் ஏன் செழித்தோங்குகின்றனர்?
“துன்மார்க்கர் . . . ஜீவித்து வல்லவராவானேன்?” இந்த கேள்வியை வெகுகாலத்துக்கு முன்பாக உண்மையுள்ள யோபு கேட்டார், மேலும் அவருடைய நாளிலிருந்து இது பல தடவைகள் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி, கடும் துயரார்ந்த ஒரு போரில் துயருற்றோரின் முன்னாள் யூகோஸ்லாவிய பிராந்தியத்தில் உள்ள (நம் முன் அட்டையில் காட்டப்பட்டுள்ள பெண் போல்) பலருடைய மனதில் பெரும்பாலும் இருக்கிறது. பொல்லாத ஆட்கள் ஏன் தப்பிப் பிழைக்கின்றனர், மேலும் செழித்துக்கொண்டும் இருக்கின்றனர்? யோபு குறிப்பிட்டபடி, அடிக்கடி ‘அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கின்றன; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.’—யோபு 21:7, 9.
இது, கடவுளைச் சேவிப்பதில், தன் அயலாரை நேசிப்பதில், மற்றும் தவறுசெய்வதிலிருந்து விலகியிருப்பதில் எந்தப் பயனும் இல்லையென பொருள்படுகிறதா? நிச்சயமாக இல்லை! பைபிள் பின்வருமாறு சொல்கையில் நமக்குச் சரியான நோக்குநிலையை அளிக்கிறது: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மைசெய்.”—சங்கீதம் 37:1-3.
ஆம், பொல்லாதவர்கள் செழித்தோங்குவதைப்போல் தோன்றுவது தற்காலிகமானதே. உண்மையில், அவர்களுடைய வாழ்க்கை வெகு குறுகியது. கடவுளைச் சேவிப்போரோ மகிமையான ஓர் எதிர்கால நம்பிக்கையை உடையோராக உள்ளனர். சீக்கிரத்தில் கடவுளுடைய இந்த வாக்கு நிறைவேற்றமடையும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) பொல்லாதவர்கள் அல்ல, நீதிமான்களே அந்தக் காலத்தைக் காண்பார்கள். நம்மைச் சுற்றிலுமுள்ளோர் எவ்வளவு பொல்லாதவர்களாக இருந்தாலும், நாம் கடவுளிடம் நெருங்கி அவருடைய சித்தத்தைச் செய்வதற்குக் கற்றுக்கொள்ள எத்தகைய ஊக்கமூட்டுதலாக இது உள்ளது!
நீங்கள் கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்துவதற்கு எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்பினால், தயவு செய்து, Watchtower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பட்டியலில் பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.