‘நான் அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன்’
“நான் எங்கிருந்து வந்தேன்?” ஒரு சமயத்தில் அல்லது மற்றொரு சமயத்தில் அநேக இளம் பிள்ளைகள் கேட்கும் ஒரு கேள்வியாக இது இருக்கிறது. பிள்ளைகள் வளரும்போது, அவர்களுடைய கேள்வி பெரும்பாலும் அறிவாழமிக்கதாகிவிடுகிறது: “உயிர் எங்கிருந்து வந்தது?” இந்தக் கேள்வி ஆயிரக்கணக்கான வருடங்களாக கலந்தாராயப்பட்டிருக்கிறது; தற்போது அநேக அறிவியலாளர்கள், உயிரின் தொடக்கத்தைப் பற்றிய புதிருக்குப் பரிணாமத்தை மிக நியாயமான விடையாகக் கருதுகின்றனர். அடிப்படையில், உயிர் தற்செயலாக வந்தது என்பதே பரிணாமவாதியின் விளக்கமாக இருக்கிறது.
சுமார் 3,000 வருடங்களுக்கு முன்னர் அரசனாகிய தாவீது எழுதினார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன்.’ (சங்கீதம் 139:14) நாம் உயிரைப் பற்றி எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அந்த வார்த்தையின் உண்மையைக் காண்கிறோம். உண்மையில் இயற்பியலாளர் ஃபிரட் ஹாய்ல் எழுதினார்: “உயிரின் வியக்கத்தக்க சிக்கலைப்பற்றி உயிர்வேதியலாளர்கள் அதிகமதிகமாகக் கண்டுபிடிக்கையில், அது தற்செயலாக வந்திருப்பதற்கான சாத்தியங்கள் முழுமையாகக் கவனிக்காமல் விடப்படும் அளவிற்கு மிக அற்பமானவை என்பது தெரியவருகிறது. உயிர் தற்செயலாக வந்திருக்க முடியாது.”
ஆக உயிரின் தோற்றமாக இருப்பது எது? இந்தப் பத்திரிகையின் முதலிலுள்ள கட்டுரைகள் அந்தக் கேள்வியைக் கலந்தாலோசிக்கும். நீங்கள் கூடுதலான தகவலைப் பெற விரும்பினால், தயவு செய்து, Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பட்டியலில் பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.