நம் இளைஞருக்கிருக்கும் எதிர்காலம் என்ன?
பயங்கரவாதிகளின் அணுகுண்டுகளினாலோ அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களினாலோ உண்டாகும் அணு ஆயுத அச்சுறுத்துதல் எல்லாரையும் அச்சுறுத்துகிறது. உங்களுடைய சொந்த பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் உட்பட இளைஞரைப் பற்றி நீங்கள் விசேஷமாக மிகவும் கவலைப்படக்கூடும். அணு ஆயுத அச்சுறுத்துதல் எந்தவொரு பிள்ளையின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் ஆபத்திற்குள்ளாக்குகிறது என்பதை உணருவது எவ்வளவு பரிதாபமாயிருக்கிறது.
ஆனால் மன திடம் கொண்டிருங்கள். இளைஞரின் எதிர்காலத்தைப் பற்றி நன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதற்கு உங்களுக்குக் காரணமிருக்கிறது. நம்முடைய இளைஞரைப் பாதுகாப்பதற்கு, மனித முயற்சிகள் பேரில் அல்ல, நம்முடைய படைப்பாளரின் கரங்களை சார்ந்திருக்கும் எதிர்காலத்தின்பேரில் நம்பிக்கையானது ஆதாரம் கொண்டிருக்கிறது.
கடவுளின் குமாரனாகிய இயேசு மத்தியக் கிழக்கில் கற்பித்து வருகையில் இளைஞருக்கான தம்முடைய அக்கறையை மெய்ப்பித்துக் காட்டினார். (மாற்கு 9:36, 37, 42; 10:13-16) கடைசியாக கடவுள் அணு ஆயுத அச்சுறுத்துதலை முடிவுக்குக் கொண்டுவந்து உலகளாவிய பரதீஸை ஸ்தாபிக்கையில் அதேவிதமான அக்கறை காட்டப்படும் என்று பைபிள் எடுத்துக் காட்டுகிறது. நம்முடைய இளைஞரும் நீங்களுங்கூட அதை அனுபவித்து மகிழலாம்.
நீங்கள் கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை உங்களுக்கு நடத்துவதற்கு எவராவது ஒருவர் உங்களைச் சந்திக்க விரும்பினால், தயவு செய்து, Watchtower, H-58 Old Khandala Road, Lonavla, 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 2-ல் உள்ள பட்டியலில் பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.