அவர்கள் ஓர் ஒருமித்த சகோதரத்துவத்தை சேர்ந்துகொள்கின்றனர்
ஆகஸ்ட் 7, 1993 அன்று உக்ரேனிலுள்ள கீவிலிருக்கும் ரிப்பப்லிக்கன் அரங்கத்தில் இது நிகழ்ந்தது. 64,000-க்கும் மேற்பட்ட ஆட்கள் அந்த முக்கியத்துவம்வாய்ந்த சமயத்திற்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். பின்னர், இரண்டு கருத்துச்செறிவுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்களாக, ஆயிரக்கணக்கானோர் “டா!” (“ஆம்!”) என்று சப்தமாக கூறினர். இவ்வாறு தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டு யெகோவா தேவனுக்கான தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்துவதற்காக அரங்கிலிருந்த ஆறு குளங்களில் ஒன்றில் முழுக்காட்டப்பட்டனர்.—மத்தேயு 28:19.
இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகளுடைய “தெய்வீக போதனை” பன்னாட்டு மாநாட்டின் இந்த மூன்றாம் நாளன்று ஆஜராயிருந்தவர்கள் ஒரு நிகழ்ச்சியைக் கண்டனர்: 7,402 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். இவர்கள் பிரிவினை நிறைந்த சர்ச்சின் பாகமாக அல்லாமல், ஒருமைப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ சபையின் பாகமாக ஆனார்கள்.
உண்மையான கிறிஸ்தவ ஒருமைப்பாட்டைக் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால், Watchtower, H-58 Old Khandala Road, Lonavla, 410 401, Mah., என்ற முகவரிக்கோ 2-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான முகவரிக்கோ தயவுசெய்து எழுதுங்கள்.