பத்து ஆண்டுகளாக ஒரேசமயத்தில் பிரசுரிக்கப்படுகின்றன!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, காவற்கோபுரத்தின் ஸ்பானிஷ் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பு பிரசுரிக்கப்படும் அதே சமயத்தில் பிரசுரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டபோது, ஓர் அன்பான ஸ்பானிஷ் சகோதரி எவ்வாறு உணர்ந்தாள் என்று கேட்கப்பட்டபோது அவள் இவ்வாறு பிரதிபலித்தாள்: ‘இதை ஓர் ஆசீர்வாதமாக நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால், எப்படிச் சொல்ல. இப்போது ஆங்கிலத்தோடு இணையாகச் செல்கிறோம். நான் ஆங்கிலம் என்று சொல்லும்போது, எப்போதும் அமைப்பைப் பற்றியே நினைப்பதுண்டு. நாங்கள் அமைப்பை, “அம்மா” என்று குறிப்பிடுகிறோம். நாங்கள் ரொம்ப நெருக்கமாக நெருங்கி வந்ததுபோல் உணருகிறோம். அது அருமை. அது அற்புதம்!’
இந்த விசுவாசமிக்க சகோதரி, ஆங்கிலம் வாசிக்காத பல வாசகர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். கடந்த வருடங்களில், கட்டுரைகள் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழிந்தபின்பு, காவற்கோபுரத்தின் ஸ்பானிஷ் பதிப்பில் தோன்றின. மற்ற மொழிகளிலும் இதேபோல் தாமதித்து வந்தன. புரிந்துகொள்ளும்வண்ணமாகவே, ஒரே பொருளை, பல மொழிகளில், ஒரேசமயத்தில் பிரசுரிப்பதற்கு ஒருவிதமான உள்ளான ஆசை இருந்தது.
எனவே, ஏப்ரல் 1, 1984 வெளியீடு முதல், ஆங்கிலப் பதிப்போடு ஒரேசமயத்தில் பிரசுரிக்க ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பதிப்பாக ஸ்பானிஷ் பதிப்பு இருந்தது. மற்ற மொழிகள் சீக்கிரத்தில் பின்தொடர்ந்தன. 1985-ன் ஆரம்பத்தில், 23 மொழிகளின் பதிப்புகள் ஒரேசமயத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழிபெயர்ப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டதால், இன்னுமதிகமான மொழிகளில் பதிப்புகள் ஆங்கிலத்தோடு இணையாக வந்துவிட்டன.
இந்தக் காவற்கோபுர வெளியீடு, ஒரேசமய பிரசுரிப்பின் பத்தாம் ஆண்டைக் குறிக்கிறது. காவற்கோபுரம் இப்போது 116 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது, அவற்றில் 85 ஒரேசமயத்தில் பிரசுரிக்கப்படுபவை. அதாவது, காவற்கோபுரத்தின் மொத்த சராசரி தயாரிப்பாகிய 1,61,00,000 பிரதிகளில் 99.3 சதவிகிதம் ஒரே அட்டைப்பட வடிவமைப்பு மற்றும் கட்டுரைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. வாராந்திர காவற்கோபுர படிப்பிற்கு ஆஜராயிருப்பவர்களில் 95 சதவிகிதத்திற்கும் மேலானோர் ஒரே பொருளை ஒரேசமயத்தில் கலந்தாலோசிக்கின்றனர்.
காவற்கோபுரத்தின் துணைப் பத்திரிகையாகிய விழித்தெழு! அதனுடைய 74 மொழிகளில் ஒரேசமயத்தில் பிரசுரிக்கப்படுபவை 37. ஆண்டு வெளியீடாகிய யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் (Yearbook of Jehovah’s Witnesses) 18 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரேசமய பிரசுரிப்பு, கடவுளுடைய ஜனங்களை “ஏகமனதும் ஏகயோசனையும்” உடையவர்களாய் ஐக்கியப்படுத்த உதவிசெய்கிறது.—1 கொரிந்தியர் 1:10.