மதிகெட்டவனின் வழியைத் தவிர்த்திடுங்கள்—ஏன்?
‘மதிகெட்டவன்’ என்ற வார்த்தை மனத்திறமையில் குறைவுபட்டிருப்பவனைக் குறிப்பதற்குப் பதிலாக, பைபிளில் பயன்படுத்தியிருக்கிற பிரகாரம் பொதுவாக விவேகத்தை வெறுத்து, கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு ஒத்துப்போகாத, ஒழுக்கச் சம்பந்தமான அர்த்தமற்ற நடத்தையைப் பின்பற்றுகிற ஒருவனைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட ஓர் ஆளைக் குறிக்கும் வேறுபட்ட எபிரெய சொற்கள்: கெசில் (‘முட்டாள்’; நீதிமொழிகள் 1:22, NW), ஏவில் (‘மதிகெட்டவன்’; நீதிமொழிகள் 12:15), நவால் (‘மூடன்’; நீதிமொழிகள் 17:7), மற்றும் லெட்ஸ் (‘பரியாசக்காரன்’; நீதிமொழிகள் 13:1). ஆஃப்ரான் என்ற கிரேக்கச் சொல், ஒரு ‘நியாயமற்றவனை’ குறிக்கிறது (லூக்கா 12:20, NW), அனோயட்டாஸ் ‘மூடனை’ குறிக்கிறது (கலாத்தியர் 3:1, NW), மேலும் மொரோஸ் என்பது ‘மதிகேடனை’ அல்லது ‘மதிகெட்ட ஒருவனைக்’ குறிக்கிறது.—மத்தேயு 23:17; 25:2, NW.
நாபால் என்ற ஒரு மனிதனின் போக்கு (1 சாமுவேல் 25), உண்மைக் கடவுளை அறிந்தும் சிருஷ்டிக்கப்பட்டவற்றை வணங்கும் மக்களைப் போன்ற ஒரு மதிகெட்டவனுடைய போக்கை எடுத்துக்காண்பிக்கிறது. (ரோமர் 1:20-25) ஒரு மதிகேடன், அல்லது மூடன் “மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்,” என்று ஏசாயா சொன்னார். (ஏசாயா 32:6) மதிகெட்டவன் ஞானத்தையும் சிட்சையையும் அசட்டைபண்ணுகிறான். (நீதிமொழிகள் 1:7, NW) புத்திமதிக்கு செவிகொடுப்பதற்குப் பதிலாக, மதிகெட்டவன் ‘தன் பார்வைக்கு செம்மையாகத் தெரியும்’ வழியில் தொடர்ந்து நடக்கிறான். (நீதிமொழிகள் 12:15) அவன் சீக்கிரத்திலே புண்பட்டுவிடுகிறான்; வாக்குவாதத்தில் உணர்ச்சிவேகப்படுகிறான். (பிரசங்கி 7:9; நீதிமொழிகள் 20:3) அவன் தன் இருதயத்தில் இவ்வாறு சொல்கிறான் (அவன் உதடுகள் ஒருவேளை இத்தனை அநேக வார்த்தைகளால் சொல்லாதவற்றை அவனுடைய செயல்கள் காட்டுகின்றன): “யெகோவா இல்லை.”—சங்கீதம் 14:1, NW.
இயேசு கிறிஸ்து, வேதபாரகரையும் பரிசேயரையும் “மதிகேடரே, குருடரே” என்று சரியாகவே குறிப்பிட்டார். அதாவது, அவர்கள் ஞானமற்றவர்களாயும் ஒழுக்கரீதியில் கீழ்த்தரமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஏனென்றால், அவர்கள் சத்தியத்தை மனிதன் உண்டாக்கின பாரம்பரியங்களினால் திரித்துக்கூறி, ஒரு மாய்மாலமான போக்கைப் பின்பற்றினார்கள். மேலும், இயேசு இந்தப் பட்டப்பெயரின் சரியான தன்மையை, அவர்களின் பகுத்துணர்வின்மையை விளக்கமாகச் சொல்வதன்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தினார். (மத்தேயு 23:15-22; 15:3) எனினும், தன்னுடைய சகோதரர் ஒருவரை ஒழுக்கரீதியில் கீழ்த்தரமானவர் என்று நியாயந்தீர்த்து, பழிசுமத்தி, அவரைத் தவறாக “மூடனே” என்று கூப்பிடுகிற ஒரு நபர், தான்தானே கெஹன்னாவுக்குப் போகும்படி செய்துகொள்கிறார்.—மத்தேயு 5:22; ரோமர் 14:10-12; மத்தேயு 7:1, 2.
மணலின்மேல் தன் வீட்டைக் கட்டின மதிகெட்ட மனிதனும், நன்றாக விளைந்திருந்த நிலத்தை வைத்திருந்ததனால், தன் களஞ்சியங்களைப் பெரிதாக்கி பின்பு வாழ்க்கையை உண்மையில் அனுபவிக்க திட்டமிட்டிருந்த பணக்காரனும், ஆக இருவரும், ஆவிக்குரிய காரியங்களை அசட்டைசெய்து, அதனால் உண்மையான ஆசீர்வாதங்களை இழந்துபோகும் மதிகெட்ட போக்கினை முக்கியப்படுத்திக் காண்பிக்கும் அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட இயேசுவின் அருமையான உவமைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும், ஆவிக்குரிய ரீதியில் ‘விழித்திருக்க’ தவறுவது முட்டாள்தனம். இது ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளுக்குத் தங்களுடன் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளாமல் மணவாளனைச் சந்திக்கப் போக புறப்பட்ட உவமையில் இயேசுவால் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.—மத்தேயு 7:24-27; லூக்கா 12:16-21; மத்தேயு 25:1-13.
உண்மையில் ஞானியாவதற்கு, ஒருவன் உலகப் பார்வையில் மதிகெட்டவனாக இருக்கவேண்டும். ஏனென்றால், “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” யெகோவா தம்மைப் பிரதிநிதித்துவம் செய்ய, உலக ஞானிகளை அல்ல, ஆனால் இவ்வுலகத்தால் அறிவில்லாதவர்களாகக் கீழ்த்தரமாக கருதப்பட்ட பைத்தியக்காரர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது இந்த உலகின் மதிகெட்ட தன்மையை இன்னும் அதிக அப்பட்டமாக்கி இருக்கிறது. மேலும் இது, தயவுபெற்ற தனிப்பட்ட ஒருவர் ஜம்பம் அடிப்பதற்கு எல்லா காரணத்தையும் நீக்குகிறது. மாறாக, எல்லா மகிமையும் சரியாகவே ஞானத்தின் ஊற்றுமூலராகிய யெகோவாவிடம் செல்கிறது.—1 கொரிந்தியர் 3:18, 19; 1:18-31.
மதிகெட்டவனுடைய கீழ்த்தரமான முறைகளிலுள்ள தர்க்கத்தை நாடும் அர்த்தத்தில் அவனுக்கு இசைவாக அல்லது “அவனுடைய மதியீனத்தின்படி” பதில்கொடுத்தல், பதில்கொடுப்பவரை மதியீனனின் ஆதாரமற்ற விவாதங்களை அல்லது வழிகளை ஒத்துக்கொள்கிறவராக ஆக்குகிறது. இந்த விஷயத்தில் மதிகெட்டவனைப்போல் ஆகாது இருப்பதற்கு, நாம் நீதிமொழியால் இவ்வாறு புத்திமதி கொடுக்கப்படுகிறோம்: “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைபோலாவாய்.” மறுபட்சத்தில், “அவன் மதியீனத்தின்படி” அவனுக்கு மறு உத்தரவு கொடுத்தல் என்பது, அவனுடைய வாதங்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றை ஏளனத்துக்குரியது என்று வெளிப்படுத்துகின்ற கருத்தில், நீதிமொழிகள் 26:4, 5 எடுத்துக்காட்டுகிறது. மேலும் அவனுடைய சொந்த வாக்குவாதங்கள்தாமே, அவன் எடுத்திருக்கிற தீர்மானங்களைவிட முற்றிலும் வித்தியாசமான தீர்மானங்களுக்கு வழிநடத்தும் என்று காண்பிப்பது பயனுள்ளதாயிருக்கும்.