உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 12/1 பக். 32
  • கடவுளின் அந்தப் பெயர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் அந்தப் பெயர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 12/1 பக். 32

கடவுளின் அந்தப் பெயர்

“யெகோவா வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.” (தி.மொ.) இவ்வாறு இலத்தீனிய கல்வெட்டு வாசிக்கிறது. இச்சொற்கள் பைபிளில் சங்கீதம் 127:1-ஐ ஆதாரமாய் கொண்டிருக்கிறது. அவை ஆழமான ஒரு சத்தியத்தைக் கொண்டிருக்கின்றன: யெகோவாவின் ஆசீர்வாதமில்லாத எந்தப் பிரயாசையும் முடிவில் வீணானதாகவே இருக்கும்.

அந்தக் கல்வெட்டு, 1780 தேதியிட்டு, இலங்கையிலுள்ள கொழும்புவில் இருக்கிற ஒரு கட்டிடத்தில் காணப்படுகிறது. யெகோவா என்ற கடவுளுடைய பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதால் அது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. (நிழற்படத்தைப் பாருங்கள்.) பண்டைய நூற்றாண்டுகளில் அப்பெயர் பரவலாக உபயோகிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கட்டிடங்களிலும், சர்ச்சுகளிலும், நாணயங்களிலுங்கூட அது சாதாரணமாகப் பொறித்து வைக்கப்பட்டிருந்தது. மிஷனரிகள் பைபிளைத் தூர நாடுகளுக்கு எடுத்துச் சென்றபோது கடவுளுடைய பெயரை உபயோகித்தனர். சந்தேகமில்லாமல் இப்படித்தான் இது இலங்கையிலுள்ள இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்படலாயிற்று.

இன்று காரியங்கள் எத்தனை வேறுபட்டிருக்கின்றன! கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டுபவர்களில் ஒருசிலர் கடவுளுடைய பெயருக்குக் கவனஞ்செலுத்துகின்றனர். நிபுணர்களில் சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் யெகோவாவின் சாட்சிகளை ஏளனமுஞ்செய்கின்றனர். ஏன்? சிலர் சொல்கிற பிரகாரம், அதன் எபிரெய உச்சரிப்பு திட்டவட்டமாகத் தெரியாததனாலாகும். ஆனால் இயேசுவுடைய பெயரின் மூல எபிரெய உச்சரிப்பை எத்தனை பேர் அறிந்திருக்கின்றனர்? எனினும், அவருடைய பெயர் உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது.

இயேசுவுக்கு, கடவுளின் பெயர் மிக முக்கியமாயிருந்தது. அவர், “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என ஜெபிக்கும்படி நமக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:9) மேலும் இறப்பதற்குச் சற்று முன்பு, அவர் “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்,” எனக் கடவுளிடம் கூறினார். (யோவான் 17:6) மெய்க் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அடிச்சுவடைப் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். அவர்களுங்கூட ‘கடவுளின் நாமத்தை வெளிப்படுத்த’ வேண்டுமல்லவா? யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு செய்கின்றனர், மேலும் யெகோவா அவர்களுடைய “வீட்டை” வெகுவாக ஆசீர்வதிக்கிறார். அவர்களுடைய விஷயத்தில், இச்சங்கீதம் உண்மையாயிருக்கிறது: “யெகோவாவைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.”—சங்கீதம் 144:15, தி.மொ.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்