உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 7/1 பக். 32
  • வாடாத ஓர் அழகு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாடாத ஓர் அழகு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 7/1 பக். 32

வாடாத ஓர் அழகு

“அழகு மறைந்துவிடுகிறது; அழகு கடந்துவிடுகிறது,” என்று கவிஞர் உவால்டர் டி லா மார் குறிப்பிட்டார். இங்கு தீட்டப்பட்டுள்ள கள்ளிப் பூக்களைக்குறித்ததில் இது நிச்சயமாகவே உண்மையாக இருக்கிறது. அவற்றின் மகிமை சீக்கிரமாக வாடிப்போகிறது.

கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “அவன் [ஐசுவரியவான்] புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.”—யாக்கோபு 1:10, 11.

இந்த நிலையற்ற உலகில், உண்மையில் ஓர் இரவில் செல்வம் மறைந்துவிட முடியும். மேலுமாக, செல்வந்தன்—மற்ற எல்லாரையும் போலவே—‘வாழ்நாள் குறுகினவன், பூவைப்போல.’ (யோபு 14:1, 2) ஓய்வான, சுலபமான வாழ்க்கையை வாழ்வதற்காக, செல்வத்தைக் குவித்துவைப்பதில் சுறுசுறுப்பாக இருந்த ஒரு மனிதனைப்பற்றிய உவமையை இயேசு சொன்னார். ஆனால், ஒரு சாவகாசமான வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் கொண்டிருப்பதாக நினைத்தபோது அவன் மரணமடைந்தான். இயேசு எச்சரித்தார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.”—லூக்கா 12:16-21.

“தேவனிடத்தில் ஐசுவரியவானாய்” இருத்தல். அதில் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? இந்த வழியில் செல்வந்தனாக இருப்பவன் “பரலோகத்திலே . . . பொக்கிஷங்களை”—கடவுளுடன் ஒரு நற்பெயரை—கொண்டிருக்கிறான். அத்தகைய பொக்கிஷம் ஒருபோதும் வாடிப்போகத் தேவையில்லை. (மத்தேயு 6:20; எபிரெயர் 6:10) வாடிவதங்கிப்போகும் ஒரு பூவைப்போல் இருப்பதற்குப் பதிலாக, பைபிளில், அப்படிப்பட்ட ஒரு மனிதன், இலையுதிராமல் இருக்கிற ஒரு மரத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறான். மேலும், “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்,” என்று நாம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறோம்.—சங்கீதம் 1:1-3, 6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்