இவற்றில் ஒன்றைப்போல நீங்கள் இருக்கிறீர்களா?
‘ஆட்டுக்குட்டியாக நூறாண்டுகள் இருப்பதைக் காட்டிலும் சிங்கமாக ஒருநாள் இருப்பதே மேலானது.’ இந்த வார்த்தைகள், ஒருசமயம் இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த பெனிட்டோ முசோலினி சொன்னதாக கருதப்படுகிறது.
முசோலினியைப் போலவே, அநேக ஆட்கள் ஆட்டுக்குட்டிகளாகவும் செம்மறியாடுகளாகவும் வகைப்படுத்தப்படுவதை ஆட்சேபிக்கலாம். இருப்பினும் பூர்வ இஸ்ரவேலின் சங்கீதக்கார-ராஜா தாவீது இவ்விதமாக அறிவித்தார்: “கர்த்தர் [யெகோவா, NW] என் மேய்ப்பராயிருக்கிறார்; . . . அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.” (சங்கீதம் 23:1, 2) ஆம், யெகோவா தேவன் பெரிய மேய்ப்பராயிருந்து, தம்முடைய மக்கள் தீங்குசெய்யாத செம்மறியாடுகள் என்பது போல அவர்களுக்கு கனிவான கவனத்தைக் கொடுக்கிறார்.
கடவுளுடைய மக்கள் சங்கீதம் 95:7-ல் அடையாளமாக செம்மறியாடுகளாக பேசப்படுகின்றனர். நாம் அங்கே வாசிக்கிறோம்: “[யெகோவா, NW] நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.” ஒருசிலர் சங்கீதக்காரன், “மேய்ச்சலின் ஆடுகளையும்” அவருடைய “கைக்குள்ளான ஜனங்களையும்”பற்றி பேசும்படி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே காரியம் தலைகீழாக இருக்கிறது, யெகோவாவின் மக்கள்தாமே இப்படி ஆடுகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். கடவுளுடைய மேய்ச்சலின் நன்மைகளை அவர்கள் அனுபவித்துக்களிக்கிறார்கள், அவருடைய அன்பான கரங்கள் அவர்களை வழிநடத்துகிறது.
யெகோவாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பராக இருக்கிறார். அவர் அடிக்கடி மக்களை ஆடுகளாக குறிப்பிட்டு பேசினார். உதாரணமாக, இயேசு ஒரு “சிறு மந்தை” பற்றியும் தம்முடைய “வேறே ஆடு”கள் பற்றியும் பேசினார். (லூக்கா 12:32; யோவான் 10:14-16) மனத்தாழ்மையுள்ள தம்முடைய செம்மறியாடுகளைப் போன்ற சீஷர்களைக்குறித்து இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.” (யோவான் 10:27, 28) நற்செயலாற்ற விருப்பமுள்ள ஆட்சியாளர் ஒருவரின் கையில் குடிமக்கள் அவருடைய அதிகாரம், தயவு, வழிநடத்துதல் மற்றும் பாதுகாப்பிலிருந்து நன்மையடைகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 1:16, 20; 2:1.
உண்மையான செம்மறியாடுகளைப் போன்ற மக்களை இயேசுவின் பாதுகாப்பான கையிலிருந்து எவராலும் பறித்துவிட முடியாது. இன்று, அவர் மக்களை தம்முடைய தயவைப் பெறாத “வெள்ளாடுகள்” அல்லது கடவுளுடைய பரலோக ராஜ்ய ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனை அனுபவிக்கப்போகும் “செம்மறியாடுகள்” என்று பிரித்துக்கொண்டிருக்கிறார். (மத்தேயு 25:31-46) ஆசீர்வதிக்கப்பட்ட அந்தச் செம்மறியாடுகளில் ஒன்றாக நீங்கள் உங்களை நிரூபிப்பீர்களா? (w93 4/15)