சரித்திரப் புகழ்பெற்ற மருத்துவமனையிலிருந்து தனிச்சிறப்பான ராஜ்யமன்றம்
பிரசித்திப்பெற்ற ஆங்கிலேய ஆய்வுப் பயணர் துணைத் தளபதி ஜேம்ஸ் கூக் 1770-ல் பெருமுயற்சி என்ற 369 டன் கப்பலை, ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிக்கப்படாதக் கிழக்குக்கரையோரமாய்ச் செலுத்திக்கொண்டிருந்தார். ஜூன் 11-ன் சாயங்காலம், அந்தக் கப்பல் அந்தக் கண்டத்தின் வடதிசையின் நெடுந்தொலைவான ஓர் இடத்தில் பவழப்பாறையில் சென்று மோதியது. கருவாலிமரக் கப்பலின் உடற்பகுதி மோசமாய்ச் சேதமடைந்தது. கப்பலில் இருந்தவர்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் பழுதுபார்த்து சரிசெய்வது உடனடியாகத் தேவைப்பட்டது. அருகிலிருந்த ஓர் ஆற்றுமுகம் பழுதுபார்ப்பதற்கு ஏற்ற இடமாக நிரூபித்தது, பழுதுபார்த்தல் ஆறு வாரங்கள் எடுத்தன. நூற்றுமூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பிரதேசத்தில் பொன் கண்டுபிடிக்கப்பட்டது. பொன்னை நாடி ஆட்கள் தீவிரமாய் ஓடிவருவது தொடர்ந்துகொண்டிருந்தது! பத்தாயிரக் கணக்கில் ஆட்கள் தங்கள் எதிர்கால செல்வ வளத்தைத் தேட வந்தனர். கூக்டெளன் தோன்றியது.
நோயுற்றோரையும் சுரங்க விபத்துகளில் காயப்பட்டோரையும் கவனிப்பதற்கு ஒரு நிலையான மருத்துவமனையைக் கட்டும்படி 1879-ல் அரசாங்கம் அனுமதி அளித்தது. அதே ஆண்டில், உலகத்தின் மறு பக்கத்தில், ஜூலை 1, சீயோனின் உவாட்ச் டவர் (Zion’s Watch Tower) பத்திரிகையின் முதற் பதிப்பைக் கண்டது. அதுமுதற்கொண்டு, இந்தப் பத்திரிகை, கடவுள்பயமுள்ள லட்சக்கணக்கான ஆட்களுக்கு ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கான ஒரு திட்டத்தை அளித்துவந்திருக்கிறது. அந்தக் கூக்டெளன் மருத்துவமனை கட்டிடம் இந்தப் பத்திரிகையுடன் நெருங்கிய இணைப்புகளை ஒரு நாள் கொண்டிருக்குமென அப்பொழுது அறியப்படவில்லை.
ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்துக்குப்பின், அந்தக் கூக்டெளன் மருத்துவமனை மாற்றீடு செய்வது தேவைப்பட்டது. புதிய கட்டிட அமைப்புக்கு அரசாங்கக் கடன் வசதிகள் கிடைக்கக்கூடியதாயிருந்தது, ஆகவே குத்தகையேற்க மனமுள்ளோர், அந்தப் பழைய மருத்துவமனை கட்டிடத்தை நீக்குவதற்கு, ஏலத்தில் தங்கள் விலைக்குறிப்பைக் கொடுக்கும்படி அழைக்கப்பட்டனர். குவீன்ஸ்லாந்துவின் தேசீய பொறுப்பாட்சிக் குழு இந்தச் சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடத்தில் பெரும் அக்கறை காட்டினது. எனினும், அந்தக் கட்டிடத்தை ஒரு புதிய இடத்துக்கு மாற்றி மீண்டும் புதுப்பித்தமைத்துக் கொடுப்பதற்கான பணச்செலவுகள் மீறிய உயர்வானவையாக நிரூபித்தன. ஒருவரும் விலைக்குறித்துக் கேட்க முன்வரவில்லை.
பெரும்பாலும் அதே சமயத்தில், கூக்டெளனில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் சிறிய சபை கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்துவதற்கு ஒரு நிலையான இடத்துக்காகத் தேடிக்கொண்டிருந்தது. அவர்களுக்குச் சொந்தமான நிலம் இல்லை ஆஸ்திரேலிய டாலர்கள் 800 மட்டுமே இருந்தது. ஒரு ராஜ்ய மன்றத்தை அவர்கள் எவ்வாறு கட்ட முடியும்? இந்த உள்ளூர் சபையின் பிரதிநிதிகள் அந்த மருத்துவமனை கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க முன்வந்தனர், சம்பளப்பணம் எதுவும் குறிக்கவில்லை. யெகோவா காரியங்களை எவ்வாறு வழிநடத்துவார்? கிளர்ச்சியூட்டும் செய்தி! அவர்களுடைய குத்தகை அளிப்பு ஏற்கப்பட்டது!
இப்பொழுது அடுத்தக் காரியம்—கட்டிடத்துக்குத் தேவைப்படும் நிலம். ஆம், அந்தக் கட்டிடம் அழியாது பாதுகாத்து மீண்டும் புதுப்பிக்கப்படும் நிபந்தனையின்பேரில் அரசாங்க நிலம் இலவசமாய்க் கொடுக்கப்படலாமென அவர்களுக்குச் சொல்லப்பட்டதாகத் தோன்றினது. எனினும் இதற்குள், இந்த முன்கொண்டுவரப்பட்ட திட்ட ஏற்பாட்டுக்கு எதிர்ப்பு, அந்தச் சமுதாயத்தின் சிநேகப்பான்மையற்ற ஒரு பகுதியாரில் வளர்ந்துகொண்டிருந்தது. சாட்சிகளின் திட்டங்களை நிறுத்திப்போடுவதற்கான சூழ்ச்சியுடன் ஒரு வேண்டுகோள் தயாரிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் கூக்டெளனின் பொறுப்பை ஏற்று, எல்லா உணவு விடுதிகளையும் சூதாடும் இடங்களையும் மூடிப்போட்டு, புகையிலை விற்பனையைத் தடுத்து நிறுத்தப்போகிறார்களென்ற ஒரு வதந்தி சுற்றிலும் பரப்பப்பட்டது. நிச்சயமாகவே இது ஒருபோதும் ஏற்படவில்லை, ஆனால் அந்த மறு நிலத்தைப் பெறுவதும் கட்டிடத்துக்குத் தேவைப்படும் அங்கீகாரங்களை அடைவதும் மென்மேலும் கடினமாகியது. அந்தக் கட்டிடத்தை இடமாற்றம் செய்வதற்கான முடிவுநேரம் விரைவாய் நெருங்கிக்கொண்டிருந்தது. குயின்ஸ்லாந்தின் நாட்டரசாங்கம் தலையிடும்படி அதன் உதவி நாடப்பட்டது. (ரோமர் 13:2-ஐ ஒப்பிடுங்கள்.) அரசாங்க நிலத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி விரைவில் அளிக்கப்பட்டது, மற்றும் கட்டிட அனுமதியும் அளிக்கப்பட்டது. நிலமும் அந்தக் கட்டிடமும் தங்கள் உடைமையில் இருக்க, அடுத்தப்படி என்ன செய்வது?
குயின்ஸ்லாந்து நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து அனுபவம் வாய்ந்த பொறித்துறை வினைஞர்களும் உதவியாளர்களும் அடங்கிய நூற்றுக்கணக்கான சாட்சிகள் ஒன்றிணைந்த ஒரு குழு வந்து சேருகிறது. இவர்கள் தங்கள் நேரத்தை இலவசமாய்த் தாங்களே முன்வந்து அளிக்கின்றனர், மேலும், ராஜ்ய மன்றங்களை வெகு விரைவில் கட்டிமுடிப்பதற்குக் கைதேர்ந்த சிறப்பு திறமையை முன்னேற்றுவித்திருக்கின்றனர். இந்தச் செயல்முறை ஏற்பாடு தனிப்பட்ட சவால்களை அளித்தது: அந்த இரண்டு-மாடி மருத்துவமனையின் பகுதிகளை அந்தப் புதிய இடத்துக்குப் பெயர்த்துக் கொண்டு செல்வதும் பின்பு அந்தக் கட்டிடத்தை மீண்டும் ஒன்றிணைப்பதும் போன்றவை. விடா பெருமழையைப் பொழியும் பயமுறுத்தலுடன் பருவ மழைக்காலம் விரைவில் நெருங்கிக்கொண்டிருந்தது, இந்த வேலை குறித்த நேரத்தில் செய்துமுடிக்கப்படுமா? அந்தப் பட்டணத்தார் சிலர் சந்தேக உணர்ச்சிகளுடன் இருந்தனர். எனினும், நடக்கமுடியாததெனச் சிலருக்குத் தோன்றினது சீக்கிரத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 1986-ல் இந்தக் கட்டிடம் இடம்மாற்றி அமைக்கப்பட்டது அதன்பின் அதன் முந்திய புகழ்நிலைக்குத் திரும்பப் புதுப்பிக்கப்பட்டது.
கூக்டெளனிலுள்ள ஆங்கிளிக்கன் நியூஸ்லெட்டர் (Anglican Newsletter) என்பதில் கொடுக்கப்பட்ட குறிப்புகள் தெரிவிக்கிறபடி, இந்த நடவடிக்கையெல்லாம் கவனிக்கப்படாமற் போகவில்லை. அது சொன்னதில் சிறிதளவு பின்வருமாறு: “சந்தேகமில்லாமல் என்னைக் குற்றங்காண்பர், ஆனால் . . . சர்ச்சைச் சுற்றிப் பார்வை செலுத்தி அதில் ஆட்கள் எவ்வளவு குறைவு என்பதைக் காணுங்கள், பின் அந்த மற்றத் தொகுதிக்குப் [யெகோவாவின் சாட்சிகளுக்குப்] பார்வைச் செலுத்துங்கள், அது எவ்வளவு நிறைவாகிக்கொண்டு வருகிறதென்பதைக் கவனியுங்கள், . . . , ஆங்கிளிக்கர்களாலும் ரோமன் கத்தோலிக்கர்களாலும் நிறைந்துகொண்டிருக்கிறது . . . அந்தப் பள்ளிக்கூடம் அவர்களெல்லாரையும் கொண்டிருக்க முடியாதபடி மிகச் சிறியதாக இருந்ததனால் ஒரு சர்ச் கட்டிடம் என்று அவர்கள் அழைக்கக்கூடியதைக் கட்டும்படி, ஒரு குறிப்பிட்ட அமைப்பு பழைய மருத்துவமனையை வாங்கியிருக்கிறதென்பது . . . உங்களுக்குத் தெரியுமா? . . . இது நடப்பதை அனுமதிக்க, நாம் எவ்வளவு பலவீனராய் இருந்திருக்கிறோம்.”
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணர்கள் கூக்டெளனுக்கு வருகின்றனர். அந்த அழகிய மழைக்காட்டின் காட்சியமைவையும் கடற்கரைக்கு அருகிலுள்ள அந்தப் பெரும் பவளத்திட்டையும் பார்த்தனுபவிக்கவும், அந்த நிலப்பகுதியின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் வருகின்றனர். வரும் பெரும்பான்மையோருக்கு காப்டன் கூக் பொருட்காட்சிச்சாலை பொதுவாய்க் கவர்ச்சிகரமாயுள்ளது. 1989 முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றமாகப் புதிய பாகம் வகிக்கும் இந்தச் சரித்திரப்பூர்வ கூக்டெளன் மருத்துவமனையும் பெரும்படியான சுற்றுப் பயணரின் கவர்ச்சிகரத்துக்கு உரியதாக இருந்துவருகிறது. நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள், கூக்டெளன் மருத்துவமனை-ராஜ்ய மன்றத்தின் படம் அவற்றின்மீது அச்சடித்துள்ள தேநீர்க்கலந் துடைக்குந் துணிக்குட்டைகளையும் T-ஷர்ட்டுகளையும் விற்கின்றன. சுற்றுப்பயணர்கள் வரும் பருவத்தின்போது, இந்தத் தனிச்சிறப்புவாய்ந்த 1879-ம் ஆண்டு கட்டிடக்கலையை நேரில் பார்க்கும்படி ஒவ்வொரு வாரமும் அறுநூறுக்கும் ஆயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் ஆட்கள் இந்தக் கட்டிடத்துக்கு வருகின்றனர்.
காவற்கோபுரம் (The Watchtower) என்று இப்பொழுது அறியப்படும் பத்திரிகை பார்வையாளர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கக்கூடியதாயுள்ளது. 1879 முதற்கொண்டு இந்தப் பத்திரிகையின் விற்பனைப் பரப்பு 1.5 கோடிக்கு மேற்பட்ட பிரதிகள் மாதத்துக்கு இருமுறை 111 மொழிகளில் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது. மனிதவர்க்கம் உடல்சம்பந்த மற்றும் ஆவிக்குரிய நல்ல ஆரோக்கியம் மீண்டும் பெறச்செய்யப்படுவதைக் காண, 1914-ன் சந்ததியாரில் சிலர் உயிருடன் இருப்பர் என்ற பைபிளின் வாக்கை அறிந்துகொள்ளும்படி இது தனிப்பட்ட ஆட்களை வழிநடத்துகிறது. (ஏசாயா 33:24) மனமுவந்து தாங்களே முன்வரும் லட்சக்கணக்கான ஆட்களால் இந்தப் பூமி முழுவதும் ஒரு பரதீஸாக மாற்றப்படும். (சங்கீதம் 37:29) உங்கள் அணிமையிலுள்ள ஒரு ராஜ்ய மன்றத்துக்குச் சென்று பாருங்களேன்? கூக்டெளன் பிரதேசத்தில் எக்காலத்திலும் தோண்டியெடுக்கப்பட்ட எல்லா பொன்னையும் பார்க்கிலும் மிக அதிக மதிப்புவாய்ந்த ஒன்றை நீங்கள் கண்டடைவீர்கள்.—நீதிமொழிகள் 16:16.