புறாக்கள் தங்கள் மாடங்களுக்குப் பறப்பதைப்போல்
புறாக்கள் ஒருவேளை மனிதன் முதன்முதல் பழக்குவித்த பறவை வகைகளுக்குள் ஒன்றாக இருக்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, எகிப்தியர்கள்—ஆண்டு முழுவதும் தங்களுக்கு உணவு கிடைக்கச் செய்யும் சூட்சம நோக்கத்தோடு—தங்கள் வீடுகளுக்கருகில் புறா-மாடங்களைக் கட்டிவைத்தனர். இந்தப் பறவைகளின் இறைச்சி வெகுவாய் விரும்பி மதிக்கப்பட்டது, அவற்றின் கழிவு எருவாகப் பயன்படுத்தப்பட்டது. மத்திய சகாப்தங்களில், புறா-மாடங்கள் அவ்வளவு அதிகமாய் விரும்பிய உடைமைகளாக இருந்ததனால் சில நாடுகளில் உயர்குடிமக்கள் அல்லது மத ஒழுங்கமைப்புகள் மாத்திரமே அவற்றை உடையோராக இருக்கும்படி அனுமதிக்கப்பட்டனர்.
இப்பொழுது பெரும்பான்மையரின் உணவுமேசைகளில் இறைச்சியின் மூல ஆதாரங்களாகக் கோழிக்குஞ்சுகள் புறாக்களின் இடத்தை ஏற்றிருக்கிறபோதிலும், பூர்வ புறா-மாடங்கள் சிலவற்றை இன்னும் காணமுடிகிறது. இங்கே படத்திலுள்ள புறா-மாடங்கள் எகிப்தில் காணப்படுகின்றன.
மாலை நேரத்தில் ஒரேகூட்டமாகத் திரும்பி வந்து, உண்மையில் பறவைகளின் ஒரு மேகம் புறா-மாடத்தில் இறங்குகிறது. எபிரெய தீர்க்கதரிசி ஏசாயா பின்வருமாறு கேட்டபோது இதைக் குறிப்பிட்டார்: “மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?” மற்றொரு மொழிபெயர்ப்பு இதைப் பெயர்த்திருக்கிறபிரகாரம்: “மேகம்போலவும் தங்கள் கூடுகளுக்கு விரையும் புறாக்கள்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?”—ஏசாயா 60:8, திருத்திய மொழிபெயர்ப்பு, 1936.
இதற்கு விடை, இன்று யெகோவாவின் அமைப்புக்குக் கூட்டங்கூட்டமாய் வந்துகொண்டிருக்கும் கடவுள்-பயமுள்ள நூறாயிரக்கணக்கான ஜனங்களில் காணப்படுகிறது. கடவுளில் நம்பிக்கை வைக்க அவர்கள் யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றங்களில் கற்றுக்கொள்கின்றனர். (ஏசாயா 60:9) கடவுளுடைய ஜனங்கள் மத்தியில், ஆவிக்குரிய மதிப்புகளும், உயிருள்ள விசுவாசமும், ஆரோக்கியமான தோழமையும், புறா-மாடத்தில் அந்தப் புறா கண்டடைந்ததைப்போன்ற சமாதானமும் பாதுகாப்புமான ஓர் உணர்ச்சியைத் தருகின்றனவென அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். (w92 7/15)