கட்டிடம் கட்டும் திட்டத்தைத் தீ தூண்டிவிடுகிறது
“தீ! தீ! யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டு மன்றம் தீப்பற்றி எரிகிறது!” இந்தத் திடுக்கிடச் செய்த கூக்குரல், நெதர்லாந்தின் வடப்பகுதியிலிருக்கும் ஒரு நகரமாகிய, ஹீரன்வீனில் அக்டோபர் 1989-ல் ஒரு வெள்ளிக்கிழமைப் பிற்பகலில் திடுமென கணீரென்று கேட்டது.
இந்தச் சிறந்த மாநாட்டு மன்றத்தை யெகோவாவின் சாட்சிகள் 11 ஆண்டுகளாகப் பயன்படுத்தியிருந்தனர். ஏறக்குறைய ஒவ்வொரு வார இறுதியிலும், நூற்றுக்கணக்கானோர் இரண்டு-நாள் வட்டார மாநாட்டுக்காயினும் அல்லது ஒரு-நாள் விசேஷித்த மாநாட்டுக்காயினும் அங்கே கூடினர். அது பைபிள் போதனைக்கு வசதியான இடமாக இருந்தது.
இந்த மன்றத்தின் கூரையில் வேலை நடந்துகொண்டிருக்கையில் ஒரு திடீர் விபத்து ஏற்பட்டது. உண்மையில் சில நிமிடங்களுக்குள்தானே, இந்த எதிர்பாராத விபத்து அந்த மன்றத்தைப் புகைந்தெரிந்த கருகிய பாழிடமாக்கிற்று. எனினும், நன்றி தெரிவிப்பதற்கேதுவாக, ஒருவருக்கும் தீங்கு ஏற்படவில்லை.
இழந்ததைப்பற்றி வருந்தினபோதிலும் சோர்வடையாமல், சாட்சிகள், மற்றொரு இடத்தில் ஒரு புதிய மன்றம் கட்டுவதற்கான திட்டங்களைப் போட்டனர். ஃப்ளெவொலந்து மாகாணத்திலிருக்கும் ஸ்விஃப்டெர்பான்ட்டில் கட்டிடம் கட்டுவதற்குப் பொருத்தமான ஓர் இடத்தைக் கண்டனர். இது சமுத்திர மட்டத்துக்கு 5 மீட்டர் கீழிருந்த முந்தின உள்நாட்டு ஸூய்டர் ஸீயில் கடலிலிருந்து மீட்கப்பட்ட மிகப் பரந்த தாழ்நிலப் பகுதியாகும்.
ஜனவரி 1991-க்குள் ஒரு புதிய மாநாட்டு மன்றத்தைக் கட்டத் தொடங்குவதற்கான அறிவிப்புக் குறி தொனிக்கப்பட்டது. இது மே மற்றும் செப்டம்பர் 1991-க்கிடையில் கட்டப்படும். அந்த இடத்தில் வேலைசெய்வதற்கு நூற்றுக்கணக்கான சாட்சிகள் தாங்களாக முன்வந்தனர், மேலும் அந்தச் செயல்முறை ஏற்பாட்டை, யெகோவா தேவனை முழு-நேரமாகச் சேவிப்பதற்கு முன்னேற்றப்படியாக இளைஞர் சிலர் கண்டனர். பெல்ஜியத்திலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல டஜன்கள் கணக்கான வேலையாளர்கள் வந்தனர்.
நேர்த்தியாய்த் திட்டமிடப்பட்ட கட்டிடம் கட்டப்பட்டது. அதன் மன்றமும் சிற்றுண்டிச் சாலையும் கண்ணாடி கூரையையுடைய நடைக்கூடத்தால் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மையான மன்றம் 1,008 ஆட்களுக்கு இருக்கைகள் அளிக்கிறது, மற்றும் 230 ஆட்கள் அருகிலுள்ள ஒரு மன்றத்தில் நிகழ்ச்சிநிரலை டெலிவிஷன் திரைகளில் கவனிக்கலாம்.
‘நாம் யெகோவாவின் பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்,’ என இன்று ஆயிரக்கணக்கானோர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். (ஏசாயா 2:2, 3, தி.மொ.) அத்தகைய ஆவிக்குரிய போதனை அளிக்கப்படுகிற பல இடங்களுக்குள் இந்தப் புதிய மாநாட்டு மன்றமும் ஒன்றே. யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் ராஜ்ய மன்றம் மற்றொன்று. அங்கே அன்பான வரவேற்பு உங்களுக்குக் கிடைக்கும்.