உயிர்த்தெழுதலின்பேரில் பவுல் பிளேட்டோவுக்கு மாறுபடுகிறார்
அபோஸ்தலன் பவுல் 1 கொரிந்தியர் 15:35-58-லும் 2 கொரிந்தியர் 5:1-10-லும் உயிர்த்தெழுதலைப்பற்றி எழுதினார். அவ்வாறு செய்ததில், அவர் பிளேட்டோவின் மற்றும் கிரேக்க தத்துவஞானிகளின் அழியாமையுடைய ஆத்துமாவைப்பற்றிய எண்ணங்களைப் பின்பற்றினாரா, அல்லது அவர் இயேசுவின் மற்றும் வேதவார்த்தைகளின் மீதிபாகத்தின் போதகத்தோடு ஒத்திசைந்திருந்தாரா?
வட மற்றும் தென் அமெரிக்காவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அதிமேற்றிராணியாரால் 1974-ல் எழுதப்பட்டு, அங்கீகார கையெழுத்திடப்பட்ட, ஆத்துமா அழியாமையா அந்த ஆளின் உயிர்த்தெழுதலா: பிளேட்டோவை முக்கியமாய்க் குறிப்பிட்டு பரி. பவுலின் கருத்து (Immortality of the Soul or Ressurrection of the Individual: St. Paul’s View with Special Reference to Plato) என்ற, இந்தச் சிறு புத்தகம், வெளிப்படையான பதிலைக் கொடுக்கிறது. மேலே குறிப்பிட்ட வேதவசனங்களில் உயிர்த்தெழுதலின் இயல்பையும் அக்காலத்து கிரேக்க செல்வாக்குப் பாதிப்புகளையும் விவாதித்தாராய்ந்தபின், நூலாசிரியர் பின்வரும் முடிவுக்கு வருகிறார்:
“ஆத்துமா உடலிலிருந்து பிரிந்து, முடிவற்ற நித்திய இருப்பில் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறதென பிளேட்டோ கற்பிக்கிறார். பிளேட்டோவுக்கு ஆத்துமா நிலையாக மற்றும் உள்ளியல்பாக அழியாமையுடையது . . . பரி. பவுல் இத்தகைய கருத்தைக் கற்பிக்கிறதுமில்லை அவ்வாறு செய்வதற்கு எந்த உரிமை பாராட்டுதலைச் செய்வதுமில்லை . . .
“அப்போஸ்தலன் பவுல், பிரிந்துள்ள மற்றும் தனிவேறான பகுதிகளாக சைக்கீ அல்லது ஆவியின் அழியாமையைப் பற்றி அக்கறை கொண்டில்லை, ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பலனாக மனிதனின் ஆத்துமா-ஆவி உடல் சேர்ந்தமைந்த அந்த முழுமையின் உயிர்த்தெழுதலிலேயே அக்கறை கொண்டிருக்கிறார். உயிர்த்தெழுகையில் கொண்டிருக்கும் அந்த உடலைப்பற்றிய பவுலின் எண்ணம் பிரேதக் குழியிலிருந்து செத்த உடல்கள் உயிர்ப்பிக்கப்படுவதோடு எதுவும் சம்பந்தப்பட்டில்லை.
“உயிர்த்தெழுதலில் கொண்டிருக்கும் உடலைப்பற்றிய அவருடைய எண்ணம், கடவுளுடைய வல்லமையால், முழு மனிதனின் ஒன்றுபாட்டின், அதே ஆளின், தனி பண்பியல்பானவனின், சிந்தை-உடல் உறுப்பமைந்தவனின், மன-உடல் பண்பமைந்தவனின் நிலைமாற்றம், மறு-சிருஷ்டிப்பு. மற்றும் மறு-அமைப்பு என நன்றாய்க் கூறலாம். நம்முடைய எதிர்கால உயிர்த்தெழுதல் நம்முடைய இயல்பான உடைமையாக அல்ல, கடவுளின் ராஜரீக ஈவாக நடந்தேறும்.”
ஆம், அழியாமை எந்த மனிதனின் இயல்பான உடைமையும் அல்ல. மாறாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையாகிறவர்களுக்கு, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா அருளும் உயர்-மதிப்புடைய கனிவான ஈவாகும்.—1 கொரிந்தியர் 15:20, 57; பிலிப்பியர் 3:14.
[[பக்கம் 9-ன் படம்]
கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ
[படத்திற்கான நன்றி]
Vatican Museum photograph