உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 7/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • பைபிள் புத்தக எண் 38—சகரியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • தேசத்தைச் சென்று பாருங்கள், ஆடுகளைச் சென்று பாருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • “சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 7/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகள் நடைமுறையில் உங்களுக்குப் பிரயோஜனமாய் இருந்திருக்கிறதா? அப்படியானால் பின்வருபவற்றை கொண்டு உங்களுடைய ஞாபகத்தை ஏன் சோதித்துப் பார்க்கக்கூடாது:

◻ இயேசு செய்த சுகப்படுத்தல்களின் முக்கிய நோக்கம் என்னவாக இருந்தது? அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள், அர்மகெதோனுக்குப் பின் ஒப்பிடுகையில் உடனடியாக சுகப்படுத்தப்படுவர் என்பதை இன்றுள்ள செம்மறியாடுகளைப் போன்ற திரள்கூட்டத்தாரின் ஊக்குவிப்புக்காக அவை விளக்கமாக வருணித்தன. (ஏசாயா 33:24; 35:5, 6)—3/15, பக்கம் 12.

◻ “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என்ற இடைவிடாத நினைப்பூட்டுதல் நமக்கு ஏன் தேவையாக இருக்கிறது? (ரோமர் 12:12) வாழ்க்கைப் பிரச்னைகளும் உத்தரவாதங்களும் சில சமயங்களில் நம்மை அவ்வளவாக அழுத்துவதன் காரணமாக நாம் ஜெபிக்க மறந்து போகக்கூடும். அல்லது பிரச்னைகள் நம்மைத் திணறடித்துவிட, இது நாம் ராஜ்ய நம்பிக்கையில் களிகூருவதை நிறுத்திவிடவும் ஜெபம் செய்வதை விட்டு விடவும்கூட செய்விக்கக்கூடும். இதன் காரணமாக ஜெபிக்கவும் இவ்விதமாக யெகோவாவினிடம் இன்னும் அதிகமாக நெருங்கிவரவும் நம்மை உற்சாகப்படுத்தக்கூடிய நினைப்பூட்டுதல்கள் நமக்குத் தேவையாகும்.—3/15, பக்கம் 14.

◻ நோவாவின் நாளைய ஜலப்பிரளயம் மனித குலத்தின் பேரில் அழிக்க முடியாத பதிவை விட்டுச் சென்றதை எது நிரூபிக்கிறது? 250-க்கு மேற்பட்ட குலமரபினர்களாலும் ஜனங்களாலும் 500-க்கும் மேற்பட்ட ஜலப்பிரளய புராணக்கதைகள் கூறப்படுகின்றனவென மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த எல்லா புராணக்கதைகளிலும் அடிப்படையான சில ஒப்புமைகள் காணப்படுகின்றன.—4/15, பக்கம் 5.

◻ இன்றுள்ள கள்ளத்தீர்க்கதரிசிகள் எவ்வாறு எரேமியாவின் நாட்களில் இருந்தவர்களைப்போல இருக்கிறார்கள்? இன்றுள்ள கள்ளத்தீர்க்கதரிசிகள் பைபிளின் கடவுளை பிரதிநிதித்துவம் செய்வதாக உரிமைப்பாராட்டிக்கொள்கிறார்கள், ஆனால் பைபிள் உண்மையில் சொல்கிறவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்ற காரியங்களைப் பிரசங்கிப்பதன் மூலம் கடவுளுடைய வார்த்தையை திருடுகிறார்கள். ராஜ்யம் பற்றிய போதனையின் சம்பந்தமாக இது விசேஷமாக உண்மையாய் இருக்கிறது. (எரேமியா 23:30)—5/1, பக்கம் 4.

◻ ஒருவர் பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டப்படுகையில், அது எதை அர்த்தப்படுத்துகிறது? முழுக்காட்டப்படுகிற நபர் ஆவியோடு ஒத்துழைக்க தீர்மானமாயிருந்து, யெகோவாவின் மக்கள் மத்தியில் அது கிரியை செய்வதைத் தடை செய்ய எதையும் செய்யாதிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆகவே, அந்த நபர் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையோடும் சபையிலுள்ள மூப்பர் ஏற்பாட்டோடும் ஒத்துழைக்க வேண்டும். (எபிரெயர் 13:7, 17; 1 பேதுரு 5:1-4)—5/1, பக்கம் 18.

◻ உருவ வழிபாடு ஏன் வழிபடுகிறவருக்கு அத்தனை தீங்கிழைப்பதாக இருக்கிறது? உருவங்கள் யெகோவா தேவனுக்கு அருவருப்பானவை என்றும் அவை தங்கள் பக்தர்களை கடவுளிடமாக நெருங்கிவர உதவிசெய்வதில் பிரயோஜனமற்றவை என்றும் பைபிள் காண்பிக்கிறது. (உபாகமம் 7:25; சங்கீதம் 115:4-8) சத்தியம் “பிரகாசமாயிராதபடி” சாத்தான் மக்களின் “மனதைக் குருடாக்கி”யிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) ஆகவே ஒருவர் ஓர் உருவத்தை வழிபடும்போது, அவர் உண்மையில் பிசாசுகளின் அக்கறையை சேவிக்கிறார். (1 கொரிந்தியர் 10:19, 20)—5/15, பக்கங்கள் 6-7.

◻ பைபிள் காலங்களில் ஏன் ஆடுகள் விலைமதிப்புள்ள ஒரு சொத்தாக கருதப்பட்டன? கம்பளம் புதுப்பிக்கப்படும் ஒரு சொத்தாக இருந்தது. இது குடும்பத்துக்கு உடையை உண்டுபண்ண பயன்படுத்தவோ அல்லது விற்கவோ படலாம். ஆண் ஆடுகளின் கொம்புகள் யூபிலியை அறிவிக்க பயன்படுத்தப்பட்டன, அல்லது அபாய அறிவிப்பொலியை முழங்க அல்லது போரில் சூழ்ச்சி முறை திட்டத்துடன் படைகளை வழிநடத்த பயன்படுத்தப்பட்டன. ஆடுகள் இஸ்ரவேலர் சாப்பிடக்கூடிய சுத்தமான மிருகங்களில் ஒன்றாக இருந்த காரணத்தால், ஆட்டு மந்தை இருக்குமானால் உணவு கிடைப்பது உறுதியாக இருந்தது, குடிப்பதற்கும் அல்லது பாலாடைக் கட்டி செய்வதற்கும் ஒழுங்காக பால் கிடைக்கும்படி அது செய்தது.—6/1, பக்கங்கள் 24-5.

◻ கடவுளை நேசிப்பவர்கள் கடவுளுடைய ராஜ்யம் வரும்படியாக ஜெபிக்கையில் என்ன கேட்கிறார்கள்? (மத்தேயு 6:10) மெய்யான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதாக வாக்களித்து, அதை நிறைவேற்ற தவறியிருக்கும் மனிதரால் உண்டுபண்ணப்பட்ட அரசாங்க அமைப்புகளை அழிப்பதன் மூலம் முடிவான ஒரு நடவடிக்கையை பரலோக ராஜ்யம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையில் கேட்டுக்கொள்கிறார்கள். (தானியேல் 2:44)—6/15, பக்கம் 6.

◻ அப்போலஜிஸ்ட்டுகள் யார்? அவர்கள் திரித்துவத்தைக் கற்பித்தனரா? அப்போலஜிஸ்ட்டுகள், இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து வந்த சர்ச் மனிதர்கள் ஆவர். ரோமர்களுடைய உலகில் மேலோங்கியிருந்த எதிர்ப்புணர்ச்சியுள்ள தத்துவங்களுக்கு எதிராக அவர்கள் அறிந்திருந்த கிறிஸ்தவத்தை தற்காப்பதற்காக அவர்கள் எழுதினார்கள். அவர்களில் எவருமே திரித்துவத்தைக் கற்பிக்கவில்லை.—7/1, பக்கங்கள் 24-9.

◻ லூக்கா 1:62 குறிப்பிடுவதாகத் தோன்றுகிறபடி, முழுக்காட்டுபவனாகிய யோவானின் தகப்பன் சகரியா செவிடும் ஊமையுமாக ஆக்கப்பட்டாரா? காபிரியேல் தூதன் சகரியாவின் செவி அல்ல ஆனால் பேச்சுதானே பாதிக்கப்படும் என்று சொன்னார். (லூக்கா 1:18-20) லூக்கா 1:64 சொல்கிறது: “உடனே அவனுடைய [சகரியாவினுடைய] வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.” இங்கே அவனுடைய செவி எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டில்லை என்பதை கவனியுங்கள். லூக்கா 1:62-ல் குறிப்பிடப்பட்டுள்ள “சைகை” சகரியாவின் முடிவை வெளிப்படுத்தும்படி செய்விக்க ஏதோ சைகை காண்பிக்கப்பட்டது என்பதை அர்த்தப்படுத்தக்கூடும்.—7/1, பக்கம் 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்