உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 6/1 பக். 32
  • “யெகோவாவின் சாட்சிகள்?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவாவின் சாட்சிகள்?”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 6/1 பக். 32

“யெகோவாவின் சாட்சிகள்?”

மேல் காணப்படும் கேள்வி பின்லாந்து மொழியில் வந்த ஹெல்சிங்கி பல்கலைக்கழக செய்தி அறிவிப்பு வெளியீட்டில் ஒரு தலைப்பாக வந்தது. தலைப்பின் கீழ், பேராசிரியர் யோர்மா பாலோ எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இவ்விதமாக வாசிக்கிறது: “செய்தி அறிவிப்பு வெளியீட்டின் முன்அட்டையில் அச்சிடப்பட்டுள்ள பல்கலைக்கழக முத்திரையை நான் கவனமாக உற்றுப்பார்த்தேன். மேல் பாகத்தின் நடுவில் ஓர் எபிரெய வாசகத்தை நான் கண்டேன், என்னுடைய யூத விருந்தினர் ஒருவரிடம் அதன் பொருள் பற்றி விசாரித்தேன். எபிரெயு அறிந்திருக்கும் இந்தக் கல்விமானின் பிரகாரம், இந்த வார்த்தை பின்லாந்து மொழியில் ‘யெகோவா’ ஆகும்.”

பின்லாந்து பல்கலைக்கழக முத்திரையின் மீது கடவுளுடைய தனிப்பட்ட பெயர் காணப்பட்டது சிலருக்கு ஆச்சரியமளித்தது. ஆனால் உண்மையில் பல்கலைக்கழகம் 350 வருடங்களாக இருந்தபோதிலும், அது ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் யெகோவா என்ற பெயர் பரவலாக அறியப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தப் பெயர், அந்தக் காலப்பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற பொது கட்டிடங்களிலும் நாணயங்களிலும் முத்திரைகளிலும் காணப்படுகிறது.—என்றுமாக நிலைத்திருக்கும் தெய்வீக நாமம் புரோஷுரை பார்க்கவும்.

நம்முடைய நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய பெயரை இனிமேலும் பயன்படுத்துவதில்லை, தொடக்க காலத்திலிருந்த அந்த அக்கறையும் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. ஒரே ஒரு தொகுதி மாத்திரமே வணக்கத்தில் அந்தத் தெய்வீக நாமத்தை பயன்படுத்தி, கர்த்தருடைய ஜெபத்திலுள்ள முதல் வேண்டுகோளுக்கு இசைவாக, அதை எல்லா இடங்களிலும் அறிவித்து வருகிறது: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) இதன் காரணமாகவே பல்கலைக்கழக முத்திரையில் அந்தப் பெயர் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட போது, மக்கள் உடனடியாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே யோசித்தார்கள். (w92 3/1)

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

Yliopisto

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்