உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 5/1 பக். 24
  • வெனிசுவேலாவில் ‘அறுவடை’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெனிசுவேலாவில் ‘அறுவடை’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இதே தகவல்
  • “எங்கள் பிராந்தியத்தில் பலமுறை ஊழியம் செய்துவிட்டோம்!”
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • அறுவடையில் மகிழ்ச்சி காணுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • அறுவடை வேலையில் முன்னேறுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 5/1 பக். 24

ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை

வெனிசுவேலாவில் ‘அறுவடை’

ஒரு சமயம் இயேசு பிரசங்க வேலையை வருடாந்தர அறுவடைக்கு ஒப்பிட்டு பேசினார். (மத்தேயு 9:36-38) அறுவடையின் எஜமான் யெகோவா தேவன், அறுவடை உண்மையில் உலகம் முழுவதும் மிகுதியாயிருக்கிறது. வெனிசுவேலாவில் அடிக்கடி வேலை செய்யப்படாத பிராந்தியமும் இதில் அடங்கியிருக்கிறது.

சாட்சிகளின் ஒரு தொகுதி குவாரிக்கோ ஸ்டேட், சபானா க்ரான்டி பிராந்தியத்தில் வேலை செய்யும் போது என்ன சம்பவித்தது என்பதை காவற்கோபுரம் சங்கத்தின் வெனிசுலா கிளைக்காரியாலயம் அறிக்கைச் செய்கிறது. சாட்சிகள் சொல்கிறார்கள்: “நாங்கள் தங்கவிருந்த வீடு கூட்டங்களைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது. ஆகவே, உடனடியாகவே அங்கே கூட்டங்களுக்கு ஆட்களை அழைக்க நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். மக்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். நகரில் நான்கு சுவிசேஷகக் குழுக்கள் இருந்தபோதிலும் மக்கள் பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள ஆவலாயிருந்தனர்.

“நாங்கள் காலை மூன்று மணிநேரமும் மதியம் மூன்று மணிநேரமும் வீட்டுக்கு வீடு வேலை செய்து தொடர்ந்து வந்த இரவு கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்துகொண்டிருந்தோம். எங்களிடம் நாற்காலிகள் இருக்கவில்லை, ஆகவே தங்களுடைய சொந்த நாற்காலிகளைக் கொண்டு வரும்படியாக அவர்களைக் கேட்டுக்கொண்டோம். கூட்டம் ஆரம்பிப்பதற்கான நேரம் நெருங்கிய போது, ஒவ்வொருவரும் ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். கூட்டம் முடிந்த போது, இலவச வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க விரும்புகிறவர்களின் பெயர்களை எழுதிக் கொள்ள நாங்கள் விரும்பியதை அவர்களிடம் சொன்னோம். ஆஜரான 29 பேருமே பட்டியலில் தங்கள் பெயர்களைக் கொண்டிருக்க விரும்பினார்கள்.

“கடைசி நபர் புறப்பட்டுச் சென்ற பின்பு நாங்கள் கதவை மூடும் போது, வீட்டு முனையில் மூன்று ஆட்கள் நின்றுகொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். சுமார் 9 மணிக்கு நாங்கள் சாப்பிடுவதற்கு உட்கார தயார் செய்து கொண்டிருக்கையில் அவர்கள் கதவை தட்டினார்கள். ‘இந்த நகரில் நீங்கள் செய்துகொண்டிருக்கும் இந்தப் பிரசங்கம் என்ன? இங்கே இன்றிரவு நீங்கள் என்ன காரணத்துக்காக ஒரு கூட்டத்தை நடத்தினீர்கள்?’ போன்ற கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்.

“நாங்கள் ஏதாவது சட்டத்தை மீறிவிட்டோமா என்பதாக கேட்டோம். இல்லை என்று அவர்கள் பதிலளித்து, அவர்கள் நகரிலுள்ள மூன்று சுவிசேஷகச் சர்ச்சுகளின் பாதிரிமார் என்றும் சொன்னார்கள். அவர்களுடைய சர்ச்சுகள் அன்று மாலை காலியாக இருந்த காரணத்தால் அவர்கள் நிலைகுலைந்து போயிருந்தார்கள். நாங்கள் அவர்களை உள்ளே அழைத்து எங்கள் வேலையைப் பற்றி விளக்கினோம். சில இலக்கியங்களையும்கூட அவர்களுக்கு அளித்து தொடர்ந்து வந்த வியாழனன்று திரும்பி வரும்படியாக அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

“அடுத்த வியாழன் பாதிரிமார் திரும்பிவந்தனர், அவர்களோடுகூட நாங்கள் சொல்வதை கேட்க விரும்பிய வேறு 22 பேரும் வந்தனர். பெண்களாக இருப்பதால், ஒரு விவாதத்தில் அவர்களுக்கு ஈடாக எங்களால் பேச முடியாது என்பதாக பாதிரிமார் நினைத்தனர். இருந்தபோதிலும் எங்களுடைய நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் கூட்டம் வெற்றிகரமாகவே இருந்தது. முடிவில் பைபிளிலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களின் ஒரு பட்டியலை நாங்கள் தயாரித்துக்கொண்டிருப்பதை விளக்கினோம். பாதிரிமார் கூட்டாளிகளில் அநேகர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதை விரும்பினார்கள். சிலர், எங்களோடுகூட பிரசங்க வேலையில் வரவும்கூட விரும்பியதாகச் சொன்னார்கள்.

“பிரசங்க வேலையில் எங்களைச் சேர்ந்துகொள்வதற்கு முன்னால், அவர்களுக்கு அதிகமான பைபிள் அறிவும் பயிற்றுவிப்பும் தேவையாக இருக்கும் என்பதை நாங்கள் விளக்கினோம். ஒவ்வொரு நாளும் ஆட்கள் வீட்டுக்கு வந்து, பைபிளை அவர்களுக்கு விளக்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சில சமயங்களில், இரவு வெகு நேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்து விட்டபிறகு, அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்தியத்தைவிட்டு நாங்கள் கடைசியாக புறப்பட வேண்டியிருந்த போது, அவர்கள் மிகவும் வருத்தமாயிருந்தார்கள், நாங்கள் திரும்பி வரும் போது பிரசங்க வேலையில் எங்களோடு வருவதாக அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். அதற்குள் தேவையான முன்னேற்றத்தை செய்துவிடுவதாக அவர்கள் உறுதியளித்தார்கள்.”

சாட்சிகள் அந்தப் பிராந்தியத்தை விட்டுப் புறப்படுகையில், 40 பேர் பைபிளை படிக்க விரும்பினார்கள். அக்கறையுள்ள இந்த ஆட்களின் பெயர்கள் அவர்களுக்கு அருகாமையில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், சபையினிடமாக கொடுக்கப்பட்டது. அதன் பின், சில சாட்சிகள் மற்றொரு நகரத்திலிருந்து இந்தப் பட்டணத்துக்குள் இடம் மாறிச் சென்றனர், நற்செய்தியின் வைராக்கியமுள்ள பிரசங்கிமார்களின் ஒரு தொகுதி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. (w92 2/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்