விழித்தெழு! இத்தாலியில் பரிசு பெற உதவுகிறது
கடந்த ஆண்டு ஒரு பத்து–வயது பள்ளி சிறுமி, “பூமி பேசக்கூடுமானால்” என்ற பொருளின் பேரில் ஒரு கட்டுரை எழுதினாள். பூமியிடமாக அது ஏன் அழுதுகொண்டிருக்கிறது என்பதாக கேட்கும் ஒரு சிறு குழந்தைக்கும் பூமிக்கும் இடையே ஒரு உரையாடலைப் போன்று பொருள் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. பள்ளிச் சிறுமி விளக்குகிறாள்:
“கண்ணாடிவளைவு வீட்டை ஏற்படுத்தியிருந்த புகைப்பனியால் தான் மாசுப்படுத்தப்பட்டிருந்ததாக பூமி பதிலளித்தது. பூமி தொடர்ந்து குழந்தையிடமாக பேசி, விரைவில் காரியங்கள் மாறிவிடும் என்றும் அதன் எதிர்காலம் மேம்பட்டதாக இருக்கும் என்றும் மனிதன் அதற்கு காரணமாயிருக்கமாட்டான் என்றும் சொன்னது. பூமியை வெறுமையாயிருக்க சிருஷ்டியாமல் குடியிருப்புக்காக அதைப் படைத்த அதன் சிருஷ்டிகராகிய சர்வ வல்லமையுள்ள கடவுளில் பூமியின் நம்பிக்கை இருந்தது.—ஏசாயா 45:18.”
பள்ளிச்சிறுமி மேலுமாகச் சொன்னாள்: “நான் தகவலை 1989, ஜூலை 22; 1989, செப்டம்பர் 8; 1989, செப்டம்பர் 22 ஆகிய விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து பெற்றுக்கொண்டேன். இந்தப் பத்திரிகைகளின் காரணமாக என்னுடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. இரண்டாவது பரிசை வென்ற என்னுடைய வகுப்பு மாணவனின் அம்மா என்னுடைய அம்மாவின் பத்திரிகை மார்க்கத்தில் இருப்பவள். அவனும்கூட இதே விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து தகவலை பெற்றுக்கொண்டான்.
“எங்களை ஞானமுள்ளவர்களாக ஆக்கும் இந்த நேர்த்தியான, திருத்தமான மற்றும் எளிய தகவலுக்காகவும்கூட உங்களுக்கு நன்றி. நான் பெற்ற பரிசு தொகை 1,00,000 லேர் [ஏறக்குறைய ரூ2,000] இதை அதிகமான பத்திரிகைகளை அச்சு செய்வதற்குப் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கிறேன்.”
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், விழித்தெழு! பத்திரிகையில் வரும் கவர்ச்சியூட்டும் கட்டுரைகளிலிருந்து நீங்களும்கூட பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.
தயவுசெய்து விழித்தெழு! பத்திரிகைக்கு ஓராண்டு சந்தா அனுப்பி வைக்கவும். இத்துடன் ரூ25 அனுப்பியுள்ளேன். (ஸ்ரீலங்காவில் விலை ரூ75.00)