விஞ்ஞானம் அற்புதங்களைத் தவறென்று நிரூபிக்க முடியுமா?
பைபிளின் அற்புதங்கள் உண்மையில் சம்பவித்தனவா? மிகப் பல விஞ்ஞானிகளும் மதத்தலைவர்களும் உட்பட, இல்லை என்பதாக பதிலளிப்பவர்கள் அநேகர் இருக்கின்றனர். அற்புதங்களில் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கைகள் நிறைந்த காலத்துக்குரியது என்றும் நவீன விஞ்ஞானம் அவை சம்பவித்திருக்கக்கூடிய சாத்தியத்தை தவறென்று நிரூபித்துவிட்டது என்றும் நினைக்கிறார்கள். ஆகவே அநேக விஞ்ஞானிகளின் கையொப்பமிடப்பட்ட, லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பின்வரும் கடிதம் கவனிப்பதற்கு தகுதியானதாக இருக்கிறது. அது சொல்கிறது:
“அற்புதங்களுக்கு எதிரான ஒரு தர்க்கமாக விஞ்ஞானத்தை உபயோகிப்பது நியாயமாகவே ஒப்புக்கொள்ளத்தக்கதாக இல்லை. அற்புதங்கள் நடக்க முடியாது என்று நம்புவது, அவை நடக்கக்கூடும் என்று நம்புவதுபோல விசுவாசச் செயலாக இருக்கின்றது . . . அற்புதங்கள் முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத சம்பவங்களாகும். மனித தத்துவத்தில் நடப்பிலுள்ள பாணி என்னவாக இருப்பினும் அல்லது கருத்து கணிப்பு வெளிப்பாடு தெரிவிப்பது என்னவாக இருப்பினும், விஞ்ஞானம் (முன்நிகழ்வுகளின் பேரில் கருத்தறிவிப்பின் அடிப்படையில்) இந்த விஷயத்தின் பேரில் சொல்வதற்கு எதையும் கொண்டிருக்க முடியாது. அதன் ‘விதிகள்’ நம்முடைய அனுபவங்களின் பொதுக் கருத்தாகவே உள்ளது. விசுவாசம் மற்ற ஆதாரங்களைச் சார்ந்ததாக இருக்கிறது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) ஆம், நவீன விஞ்ஞானம் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளை தவறென்று நிரூபிக்க எந்த வழியும் இல்லை. (w91 10/1)