ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
‘ஆவிக்குரிய பசியுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’
இயேசு சொன்னார்: “ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) இப்படிப்பட்டவர்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து உயிரளிக்கும் தகவலை பெற்றுக்கொள்ள விரும்புவார்கள். இந்த அறிவை எடுத்துக் கொள்வது அவர்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.—மத்தேயு 4:4; யோவான் 17:3.
◻ ஆப்பிரிக்க தேசத்தில் ஆவிக்குரிய பசியுள்ள ஒரு மனிதன் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் ஒரு பிரதியை பெற்றுக்கொள்ள குளிரிலும் இருட்டிலும் நான்கு மணிநேரங்கள் நடந்து சென்றார். யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்தை அடைந்தபோது, கடைசி புத்தகம் அளிக்கப்பட்டுவிட்டதை அறிந்து வெகுவாக ஏமாற்றமடைந்தான். கூடுதலான பிரதிகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையாக, அவன் மூன்று நாட்கள் தங்கியிருந்தான், பின்னர் கடைசியாக அவன் நேர்த்தியான இந்த ஆவிக்குரிய தகவலை சொந்தமாக பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தான்.
தனிமையாக இருக்கும் பகுதியில் சாட்சிகள் தங்கியிருந்த அந்த மாதத்தில், இவர்கள் 55 புத்தகங்கள், 365 புரோஷுர்கள், 145 பத்திரிகைகள் விநியோகித்து 5 சந்தாக்களைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் புறப்பட்டு வருகையில், பெரியவர்களும் சிறு பிள்ளைகளுமாகச் சேர்ந்து கெப்பல்லி பாஷையில் அவர்களைப் பார்த்து “யெகோவா உங்களோடுகூட இருப்பாராக!” என்று சொன்னபோது அவர்கள் வெகுவாக உருகிப் போனார்கள்.
அதே தேசத்தில் மற்றொரு நபரும்கூட ஆவிக்குரிய பசியுள்ளவராக இருந்தார். அவள் அவளுடைய சர்ச்சின் பொருளாளரும் அவளுடைய தேசத்தில் பொழுதுபோக்கு துறை அதிகாரியாகவும் இருந்தாள். ஒரு சாட்சி அவளை வந்து சந்தித்த போது, கிறிஸ்தவத்துக்குரிய தேவைகளிலிருந்து சர்ச் வெகுவாக குறைவுபட்டிருப்பதை கண்ணீரோடு ஒப்புக்கொண்டாள். சாட்சிகள் மெய் மதத்தை எப்படி அடையாளங் கண்டுகொள்வது என்பதை அவளுடைய சொந்த பைபிளிலிருந்தே காட்டினார்கள். பின்னர் அவள் ராஜ்ய மன்றத்தில் இரண்டு கூட்டங்களில் ஆஜரான பின்பு சொன்னாள்: “நான் பார்த்ததும் கேட்டதும் இதுவே சத்தியம் என்று உண்மையில் என்னை நம்ப வைத்துவிட்டது.” கூட்டங்களும் அங்கு ஆஜராயிருந்தவர்களும் அவள் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டனர். தன்னை வந்து சந்தித்த சாட்சிகள் சொன்னது, அவை கற்பனை அல்ல, ஆனால் உண்மையானதே என்பதை அவள் கண்டாள். அப்போது முதல் சர்ச்சோடு தன் உறவைத் துண்டித்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறாள், இது அந்தச் சமுதாயத்தில் நல்ல சாட்சி கொடுத்தலில் விளைவடைந்திருக்கிறது.
◻ மெல்லனீசியாவைச் சேர்ந்த ஓர் இளம் மறைகல்வி ஆசிரியர் ஆவிக்குரிய பசியுள்ளவராக இருந்தார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தை தன் அம்மாவின் வீட்டில் மேசையின் மீது பார்த்த அவர் அதிகாரங்கள் 2 மற்றும் 3-ஐ வாசித்தார். அதில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்த பைபிள் வசனங்கள் யாத்திராகமம் 20:4, 5 மற்றும் யோவான் 4:23, 24 அவர் மனதைத் தொட்டது. இந்த வேதவசனங்கள் சொல்லும் காரியத்தை முன்னிட்டுப் பார்க்கையில், கத்தோலிக்க சர்ச் வணக்கத்தில் சொரூபங்களின் உபயோகத்தை ஏன் அனுமதிக்கிறது என்பதாக அவருடைய பாதிரியிடம் அவர் கேட்டார். பாதிரி கேள்வியை தட்டிகழித்துவிட்டார். அந்த மனிதன் அநேக பல மற்ற “கிறிஸ்தவ” மதங்களுக்குச் சென்றான், ஆனால் அவர்களால் அவனுடைய கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளிக்க முடியவில்லை. கடைசியாக சத்தியத்தில் ஏற்கெனவே அக்கறை காட்டி வந்த தன் அம்மாவோடு யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்துக்குச் செல்ல அவர் தீர்மானித்தார். சாட்சிகள் மத்தியில் அவர் கண்ட அன்பும், பைபிள் ஆதாரமுள்ள அவர்களுடைய போதனைகளும் அவரை வெகுவாக கவர்ந்தது.
தொலை தூரத்தின் மத்தியிலும், இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய்து அவர் கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராகி, சத்தியத்துக்காக விரைவாக நடவடிக்கை எடுத்து முழுக்காட்டப்பட்டார். இப்பொழுது அவர் ஓர் உதவி ஊழியராக இருக்கிறார். அவருடைய அம்மாவும் உடன்பிறந்த இரண்டு சகோதரிகளும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். அந்த இளம் மனிதன் தன் சொந்த இனத்தாருக்கு பிரசங்கம் செய்து அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார். இப்பொழுது இந்தப் பகுதியில் அநேகர் கூட்டங்களுக்கு ஆஜராகிறார்கள்—இவை அனைத்துக்கும் காரணம் ஓர் இளம் மனிதன் பைபிளை விளக்கும் ஒரு புத்தகத்தை மேசையின் மீது காண நேர்ந்த போது, அதை படித்தான், கற்றுக்கொண்டதை கருத்தூன்றிய விதமாய் எடுத்துக்கொண்டான்.
யெகோவா இன்று மாபெரும் ஆவிக்குரிய போஷாப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். திரளான மக்கள் அதிலிருந்து நன்மையடைகிறார்கள். ஏசாயா பின்பவருமாறு சொன்னபோது இதை அவர் பொருத்தமாக முன்னுரைத்தார்: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ [பொய் மத உறுப்பினர்கள்] பசியாயிருப்பீர்கள்.” (ஏசாயா 65:13) நம்முடைய ஆவிக்குரிய பசியை திருப்தி செய்ய யெகோவா செய்யும் ஏற்பாட்டிலிருந்து நாம் நன்மையடைவோமானால் நாம் சந்தோஷமுள்ளவர்களாக இருப்போம். (w91 10/1)