“மிக மிகச் சிறப்பானவர்கள்”
அ.ஐ.மா., ஜார்ஜியாவில் ஒரு கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் விழித்தெழு!-வைக் குறித்து இதைத்தான் சொன்னார். அவர் சமீபத்தில் இவ்வாறு எழுதினார்:
“கடந்த ஏழு ஆண்டுகளாக நான் என்னுடைய கல்லூரி கட்டுரை பயிற்சியில் விழித்தெழு! பத்திரிகைகளை பயன்படுத்திவருகிறேன், உங்கள் எழுத்தாளர்கள் மிக மிக சிறப்பானவர்கள் என்று நான் சொல்ல வேண்டும். அக்கறை-தூண்டும் அறிமுகங்களும் பல கட்டுரைகளில் அடங்கியிருக்கும் தெளிவான விவரங்களும் ஆரம்ப, இடைப்பட்ட மற்றும் அனுபவமுள்ள எழுத்தாளர்களுக்கு மிக நேர்த்தியான முன்மாதிரிகளாகும்.
“விழித்தெழு!-விலுள்ள கட்டுரைகள் பொழுதுபோக்காகவும் தகவலறிவிப்பதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் ஆனால் அவை மிக உயர்ந்த இலக்கணத் தரமுள்ளவையாகும். நிறுத்தக்குறிகள், மொழிவழக்குச் சொற்றொடர்கள், உருவகமொழி, மற்றும் சொல்நடையின் சரியான பயன்பாடு பற்றி எடுத்துக்கூற இவைகளை நான் பயன்படுத்துகிறேன். புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வாசகருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு உண்மையிலேயே சவால் மிகுந்ததாயும், ஆனாலும் புத்துயிரளிப்பதாயும் சராசரி செய்திப்பத்திரிகையிலிருந்து ஒரு மாறுபாடாகவும் இருக்கிறது. விழித்தெழு!-வின் வெற்றி, ஒவ்வொரு பிரதியிலும் வேலைசெய்வதில் செலவழிக்கப்படும் தரமான நேரத்துக்கும் கவனத்துக்கும் அத்தாட்சியளிப்பதாக இருக்கிறது.”
விழித்தெழு!-வை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால், கீழ்காணும் கூபனை பூர்த்திசெய்து தபாலில் அனுப்பவும்.