இலட்சக்கணக்கானோர் செல்கிறார்கள். நீங்கள் செல்வீர்களா?
எங்கே செல்கிறார்கள்? இயேசு கிறிஸ்துவின் வருடாந்தர மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு.
1991-ல் உலகம் முழுவதிலும் மொத்தம் 1,06,50,158 பேர் ஆஜராயிருந்தனர்.
ஜனங்கள் ஏன் செல்கிறார்கள்?
கிறிஸ்துவின் மரணம் மனிதகுலத்துக்கு அர்த்தப்படுத்தும் அந்தக் காரியத்தினிமித்தம் செல்கிறார்கள்.
அது வியாதி, துயரம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலை எற்படவிருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது.
மரித்த அன்பானவர்களும்கூட பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்பட்ட பூமியில் ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
இயேசுவின் மரணம் எவ்விதமாக இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொண்டுவர முடியும்?
அதை நீங்கள் கண்டுபிடிக்க வரவேற்கப்படுகிறீர்கள்
யெகோவாவின் சாட்சிகள் இந்த முக்கியமான நிகழ்ச்சியின் போது அவர்களோடு சேர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறார்கள்.
உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள ராஜ்ய மன்றத்தில் ஆஜராயிருங்கள்
இந்த வருடம் அது ஏப்ரல் 17-ம் தேதி, வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நடைபெறும்
சரியான நேரத்துக்காக உள்ளூரிலுள்ள சாட்சிகளைக் கேட்கவும்.