தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?
“என் தோற்றத்தைப்பற்றி நான் மனங்கலங்கினேன்,” என அ.ஐ.மா., பென்சில்வேனியாவிலுள்ள பீவெர் ஃபால்ஸிலிருக்கும் ஓர் இளம் பெண் எழுதுகிறாள். “நான் அழகற்றும் கவர்ச்சியற்றும் இருந்தேனென உணர்ந்தேன்.” அவள் விளக்குகிறாள்: “சில நாட்களுக்கு நான் பெரும்பாலும் எதையும் சாப்பிடமாட்டேன், எடையில் ஒருசில பவுண்டுகளை உண்மையில் இழந்தேன், ஆனால் சாப்பிடாதிருந்ததால் நான் அவ்வளவு அதிக பசியில் அடுத்த நாள் உணவைத் தெவிட்ட உண்டு இழந்த எடையைத் திரும்பப் பெறுவேன்.”
பின்னால், கிறிஸ்தவ மாநாடு ஒன்றில், அவள் சொன்னதாவது: “நான் கண்ணாடியில் என்னைப் பார்த்து என் சிநேகிதியிடம், ‘நான் மிக மோசமாகத் தோன்றுகிறேன்’ எனக் கூறினேன்!
“இந்த மிக நேசமான சிநேகிதி என்னிடம், இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் ‘உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்’ என்ற பகுதியை நான் வாசித்தேனாவென என்னைக் கேட்டாள். இல்லையென நான் அவளிடம் சொன்னேன். அவள் என்னிடம், ‘நீ வீட்டுக்குச் சென்று இன்றிரவு அதை வாசிக்க வேண்டும்,” என்று சொன்னாள். அதையே நான் செய்தேன்.
“நான் என் வாழ்க்கைச் சரிதையை வாசிப்பதைப்போல் உணர்ந்தேன். பின்பு என்னைச் சிந்திக்க வைக்கச் செய்த ஒரு கேள்விக்கு வந்தேன், ‘நீ பலர் பாராட்டுபவளாக, வெற்றிகரமாக, அல்லது மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் குறிப்பிட்ட ஒரு தோற்றம் உனக்குத் தேவை என்ற எண்ணத்தைப் பரப்புவோர் யார்?’”
இந்தக் கேள்விக்குப் பதில் தன் வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றத்தை உண்டாக்கியதென இந்த இளம்
பெண் கூறினாள். அவள் முடிவாகச் சொன்னதாவது: “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் கொடுத்துள்ள உதவியான ஆலோசனைகளின்மூலம், நான் முதல் வைக்கவேண்டிய முக்கியக் காரியங்களை அதனதன் இடத்தில் சரிப்படுத்தி வைப்பதற்குரிய தேவையைக் கண்டேன்.”
இன்று இளைஞருக்குப் பல நெருக்கடிகள் இருக்கின்றன. அவற்றை வெற்றிகரமாய்ச் சமாளிக்க அவர்களுக்கு உதவி தேவை. இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம் இந்த உதவியை அளிக்கிறது. கவர்ச்சிகரமாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கீழ்க்காணும் குறிப்புச் சீட்டை நிரப்பி தபாலில் அனுப்புவதன்மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.