உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 6/1 பக். 26
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 6/1 பக். 26

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகள் நடைமுறையான மதிப்பையுடையதாய் உங்களுக்கு இருந்ததா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை பின்வருபவற்றைக் கொண்டு ஏன் பரீட்சித்துப் பார்க்கக்கூடாது?

◻சாத்தானின் தந்திரமான, சூழ்ச்சிகரமான செயல்களை நாம் எதிர்ப்பதற்கு ஒரு வழி என்ன?

சாத்தானை எதிர்ப்பதற்கு நாம் நம்மையே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாத்தான் தன் அனுகூலத்திற்காக பயன்படுத்தும் அல்லது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பலவீனம் நம்மிடம் இருக்கிறதா? உதாரணமாக: “நான்” என்ற தன்முனைப்பு பிரச்னை நமக்கு இருக்கிறதா? நாம் எப்பொழுதுமே முதலாவது இருக்க வேண்டுமா? நாம் நம்மையே அறிந்திருந்தால் அப்பேர்ப்பட்ட பிரச்னைகளை சரி செய்யலாம், நாம் தாழ்மையுள்ளவர்களாக இருந்தால் இந்த விதத்தில் நாம் நம்மை சாத்தான் தாக்க வழியை திறந்து வைக்க மாட்டோம்.—12/1 பக்கம் 10, 11.

◻ “இருதயத்திலிருந்து ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறினதன் அர்த்தம் என்ன? (1 பேதுரு 1:22)

“ஊக்கமாக” என்பது சொல்லர்த்தமாக “முழு அளவில் விரிந்து செல்கிற விதமாய்” என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கிடையில் அப்பேர்ப்பட்ட அன்பு வெளிக்காட்டப்படுவதற்கு முயற்சியும் நாம் இயல்பாகவே கவர்ந்திழுக்கப்படாதவர்களும் அடங்கும்படி நம் இருதயத்தை விரிவாக்குவதும் தேவைப்படுகிறது.—12/1, பக்கம் 16.

◻ நம் அனைவரையும் நித்திய ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தும் ஏழு படிப்படியான தெய்வீக உடன்படிக்கைகள் யாவை?

ஏதேனிய உடன்படிக்கை, ஆபிரகாமிய உடன்படிக்கை, நியாயப்பிரமாண உடன்படிக்கை, மெல்கிசெதேக்கைப் போன்ற ஓர் ஆசாரியருக்கான உடன்படிக்கை, தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை, ராஜ்ய உடன்படிக்கை.—2/1 பக்கம் 19.

◻ கடவுள் ஏன் நியாயப்பிரமாண உடன்படிக்கையை ஆபிரகாமிய உடன்படிக்கையோடு தற்காலிகமாக கூட்டினார்?

இஸ்ரவேலர்கள் பாவிகள் என்றும் நிரந்தரமான ஆசாரியரும் பரிபூரணமான பலியும் தேவை என்பதை நியாயப்பிரமாண உடன்படிக்கை நிரூபித்தது. வித்தின் வம்சாவழியை இது பாதுகாத்தது, அந்த வித்து யார் என்பதை அடையாளம் காண உதவி செய்தது. ஒரு நாள் கடவுள் ராஜ-ஆசாரியர்களின் தேசத்தை உடையவராயிருப்பார் என்பதையும் இது காட்டியது.—2/1 பக்கம் 16.

◻ வெற்றிகரமான விவாகத்திற்கு அடிப்படை என்ன?

தம்பதிகளிடையே பரஸ்பர அன்பு, மரியாதை, ஒருவர் மற்றொருவருடைய நற்குணங்களை உண்மையாக போற்றுதல், ஒருவர் மற்றொருவருடைய பலவீனங்களை கவனியாது மன்னித்தல்.—4/1 பக்கம் 21.

◻ சைனட்டிக்கஸ் கைப்பிரதிகள் என்றால் என்ன? அவை எவ்வளவு முக்கியத்துவமுடையவை?

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முமுவதும், எபிரெய வேதாகமத்தின் பகுதிகளின் கிரேக்க மொழிபெயர்ப்பும் சைனட்டிக்கஸ் கைப்பிரதிகளில் அடங்கியிருக்கிறது. இது 1,600 வருடங்கள் பழமையானதாக இருக்கிறது, மேலும் நம் பைபிள் கைப்பிரதிகளின் தொகுப்புக்கு ஒரு முக்கிய இணைப்பாக அமைகிறது.—4/1 பக்கங்கள் 30, 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்