உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 10/1 பக். 22-23
  • தாபோரிலிருந்து வெற்றிக்கு!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தாபோரிலிருந்து வெற்றிக்கு!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • விசுவாசத்தால் பலமிக்க படையை பாராக் வென்றார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “நான் கண்டிப்பாக உங்களோடு வருவேன்”
    கடவுளின் கைப்பிடித்து தைரியமாக நடங்கள்
  • புதிய தலைவரும் தைரியமுள்ள இரண்டு பெண்களும்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • தைரியமுள்ள இரண்டு பெண்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 10/1 பக். 22-23

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்

தாபோரிலிருந்து வெற்றிக்கு!

சரித்திரத்தின் பாதைகள் சந்தித்த இடத்தில் ஒரு கோபுரத்திலிருந்து கீழே பார்ப்பதை கற்பனைசெய்துபாருங்கள். நீங்கள் உண்மையில் சரித்திரம் அமைவதைக் காண்பீர்கள்.

அந்த விவரிப்புக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது பைபிள் குறிப்பிடும் மெகிதோ பிரதேசம். ஏனென்றால் அது முக்கிய வியாபார மற்றும் இராணுவ மார்க்கங்களுக்கு குறுக்காக இருந்தது. என்றபோதிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்கு குறுக்காக தாபோர் மலை உயர்ந்து நிற்கிறது. அதே சமயத்தில் செழிப்பான யோர்தானின் பிறைப்பிரதேசத்தின் பட்டணங்களுக்குச் செல்லும் பிரபல சாலை மார்க்கமாகிய மாரிஸ் மார்க்கத்தைப் பார்த்தபடி நிற்கிறது.a

நீங்கள் தாபோர் மலையை அந்தப் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் அது உங்களைக் கவர்ந்துவிட்டதைக் காண்பீர்கள். (எரேமியா 46:18 ஒப்பிடவும்.) தாபோர் அதன் சுற்றுப்புறச் சூழலில் மகத்துவத்துடன் தனித்து நிற்கிறது, அதன் கூம்பு வடிவம் எல்லாத் திசைகளிலிருந்தும் காணப்படக்கூடியது. தெற்கே அதற்கு முன்பாக அமைந்துள்ள சமவெளியில், கடலோரப் பகுதியை யோர்தான் பள்ளத்தாக்குடன் இணைக்கும் செழிப்பான யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் கோபுரமாய் உயர்ந்து நிற்கிறது.

மெதுவாக வட்டமாய் உயர்ந்திருக்கும் தாபோரிலிருந்து நீங்கள் தெற்கே யெஸ்ரயேல் பட்டணத்தைப் பார்க்கலாம். இது யெகூ தன் ரதத்தில் மிகுந்த கோபத்துடன் ஆகாபின் வீட்டிற்குச் சென்றதையும் யேசபேலுக்கு வந்த இழிவான முடிவையும் உங்கள் நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். (1 இராஜாக்கள் 21:1; 2 இராஜாக்கள் 9:16–33) அதற்கு அண்மையில் இருப்பதுதான் மெகிதோ. மேற்கே நீங்கள் கர்மேல் பர்வதத்தைப் பார்க்கலாம், இங்கேதான் எலியா அக்கினிப் பரீட்சையை நடத்தினான். (1 இராஜாக்கள், அதிகாரம் 18) தாபோரிலிருந்து கீசோன் நதி கடல் நோக்கிப் பாய்வதைக்கூட நீங்கள் பார்க்கலாம். மற்றும் மேற்கே ஏறக்குறைய ஐந்து மைல் வடமேற்குப் பகுதியில் அமைந்த கீழ்க் கலிலேய மலைப்பிரதேசத்தில் நாசரேத்து இருக்கிறது.

ஆனால் தாபோர் என்று சொல்லும்போது, உங்களுக்கு எந்தப் பைபிள் பதிவு நினைவுக்கு வருகிறது? அநேகமாக தெபோராள் மற்றும் பாராக் பற்றியதாக இருக்கும். அவர்களுடைய காலத்தில் ஆத்சோரின் அரசன் யாபீனின் தலைமையில் கானானியர்கள் இஸ்ரவேலை 20 ஆண்டுகளாக ஒடுக்கிவந்தனர். அந்தச் சமயத்தில் தெபோராள் தீர்க்கதரிசினி பாராக்கை நடவடிக்கை எடுக்க ஊக்குவித்தாள். அவன் பத்தாயிரம் இஸ்ரவேலரை, விசேஷமாக கலிலேயாவிலிருந்த நப்தலி மற்றும் செபுலோன் கோத்திரத்தினரை எழச்செய்து, தாபோரில் ஒன்றுகூட்டினான். அவர்களுக்கோ போதுமான ஆயுதங்கள் இல்லை, ஏனென்றால் இஸ்ரவேலில் ஒரு கேடயமோ அல்லது ஈட்டியோ இருக்கவில்லை.—நியாயாதிபதிகள் 5:7–17.

அவர்களுக்கு எதிராக ஒரு பிரமாண்டமான இராணுவம் வந்தது. யாபீனின் தளபதி சிசெரா பலமாக ஆயுதந்தரித்த கானானிய போர்வீரர்களை யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்குக் கொண்டுவந்தான். அவர்கள் அநேகமாய் பார்ப்பதற்கு அடுத்த பக்கத்தில் வலது மேற்புறத்திலுள்ள ஒரு விளக்கப்படத்தில் காட்டப்பட்டிருக்கிற எகிப்திய சுவர் சிற்பத்தில் காணப்படும் ஆயுதந்தரித்த மனிதரைப்போல் இருந்திருக்க வேண்டும். எகிப்திய போராயுதங்களின் செல்வாக்கு கானானிய போர்த் தளவாடங்களில் காணப்பட்டது. அதில் சிசெராவின் பயங்கரமான போர்த்தளவாடங்கள்—900 யுத்த ரதங்கள் உட்பட்டிருந்தன!

அந்தக் கானானிய ரதங்கள் தாக்குதல் நடத்தும் செயல்படவல்ல அசல் மேடைகளாக இருந்திருக்கும். ரதத்தை ஓட்டியவன் குதிரையின் கடிவாள வார்களைத் தன் இடுப்பைச் சுற்றி கட்டிக்கொண்டு, இவ்விதமாக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு தன் கைகளைத் தாராளமாக உபயோகிப்பவனாக இருந்திருக்க வேண்டும். அல்லது தாக்குதலை செய்யும் குதிரை மீது அவன் கவனம் செலுத்த, தன்னுடன் ரதத்தில் இருப்பவன் ஆயுதங்களை பயன்படுத்தியிருக்கக்கூடும். ரதங்களின் சக்கரத்தின் அச்சுப்பகுதி கத்திகளைக் கொண்டிருந்தன. தாபோரிலிருந்து தாழ பார்க்கும் பாராக்கின் மனிதருக்கு, கீழே திரண்டுகூடியிருந்த ரதங்கள் கட்டுப்படுத்தப்படக்கூடாதவையாக, வெற்றிக்கொள்ளப்படக்கூடாதவையாக தோன்றிருக்க வேண்டும்.

என்றபோதிலும், யெகோவா பாராக்குக்கு ஏற்கெனவே இப்படியாக வாக்களித்திருந்தார்: “நான் . . . சிசெராவையும், அவன் ரதங்களையும் அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்.” சரியான சமயத்தில், யுத்தம் செய்ய வல்ல இஸ்ரவேலர் தாபோர் மலையிலிருந்து இறங்கி வந்தார்கள்.—நியாயாதிபதிகள் 4:1–14.

வெறுமென எதிர்பாராத சமயத்தின் அனுகூலத்தைவிட மிகவும் மதிப்புள்ளதாயிருந்த காரியம், பரலோகத்திலிருக்கும் வல்லமைவாய்ந்த தங்களுடைய கடவுளிடமிருந்து இஸ்ரவேல் பெற்ற உதவிதான். தெபோராள் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இப்படியாகப் பாடினாள்: “வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின. கீசோன் நதி . . . அவர்களை அடித்துக் கொண்டுபோயிற்று. என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்.” (நியாயாதிபதிகள் 5:20, 21) ஆம், குறைந்த ஆயுதங்களையுடைய, ஆனால் தைரியமான இஸ்ரவேலர் நல்ல ஆயுத பலமுடைய கானானியரைப் புறம் ஓடச்செய்தாலும், உண்மையான அந்தப் பலனைக் கடவுள்தாமே தீர்மானித்தார். வற்றியிருந்த அந்த ஆற்றுப்படுகையில் திடீரென ஒரு பெருவெள்ளத்தை ஏற்படுத்தும் மழையைப் பொழியப்பண்ணினார். இது அந்தப் பயங்கரமான ரதங்களை இயக்க முடியாமற் செய்துவிட்டது.

கீழே கீசோன் நதியின் ஒரு பகுதியைக் காண்கிறீர்கள். மழைக்காலங்களில், அது வெள்ளப்பெருக்கெடுத்து பொங்கிவழிந்து அப்பகுதியைச் சேற்றாக்கிவிடும். அப்படிப்பட்ட சேற்றில் கானானிய ரதங்கள் தப்பிச் செல்ல முயலுவதை எண்ணிப்பாருங்கள். புரண்டோடும் நதியின் தண்ணீர்கள் தப்பியோடும் சில போர் வீரர்களை அல்லது ரதங்களை, அல்லது இரண்டையுமே அடித்துச் சென்றன. இஸ்ரவேலின் வெற்றி தளபதி சிசெராவையும் மேற்கொண்டது; அவன் தன் ரதத்தைக் கைவிட்டு போர்க்களத்திலிருந்து காலோட்டமாய்த் தப்பிச்செல்கிறான். யாகேல் என்ற பெண்ணின் கூடாரத்தில் தஞ்சம் புகுந்தபின், அவள் சரியான நேரம் பார்த்து, இந்தப் பகைவனைச் சாகடித்தாள்.—நியாயாதிபதிகள் 4:17–22.

இப்படியாக, தெபோராளுக்கும் உயர்ந்து நின்ற தாபோர் மலையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும் முன் இஸ்ரவேலின் சரித்திரத்தில் முக்கியமானதும் வெற்றி சிறந்ததுமான ஓர் அத்தியாயம் திறவுண்டது. (w90 5/1)

[அடிக்குறிப்புகள்]

a 1990 யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டியில் தாபோரின் நிலப்படத்தையும் பெரிய தெளிவான நிழற்படத்தையும் பார்க்கவும்.

[பக்கம் 22-ன் படங்களுக்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

Pictorial Archive (Near Eastern History) Est.

Pictorial Archive (Near Eastern History) Est.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்